பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


எல்லாம் சொந்த பணத்திலே வாங்கின தாக்கும். நீங்க உங்கையாலே எனக்குத் தீவாளிக்கு வாங்கித்தாராப்பிலே, நானும் எங்கையாலே உங்களுக்கு வாங்கித்தரணுமில்லே... அதுக்காகத்தானாக்கும்!...சுருக்காச் சாப்பிடுங்க. தீவாளிக்குப் பலகாரம் பட்சணம் செய்யவேணும்!"

கைப்பட்ட கன்னத் தழும்பு சிரிக்கத் தலைப்பட்டது!

அங்காளம்மையின் 'துணி மணிகளை நோக்கிக் கை தொழுதாள் பொன்னரசி!

"எங்களுக்கு நீ தெய்வமா நிண்ணு நல்லது செய்யி, அக்கா!"