பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


சுழன்றாேடிய அவ்வார்த்தைகளின் ஒலி அலைப் பரப்பினூடே, வாசவி சுழன்றாள், சுற்றினாள், கண்மண் தெரியாமல்-திக்குத்திசை புரியாமல்!

நெஞ்சிலிருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.

கூடத்தில் கோயில் கொண்டிருந்த அம்பிகையின் முன் கரங்கூப்பினாள்.

பாபுவை மடியில் போட்டுக் கொண்டவாறே அடித்து வைத்த சிலையென வாசவி வீற்றிருந்தாள், தன்னை மறந்து.

"வாசவி வாசவி!"

கதவைத் தட்டும் ஒலி, 'மைக்'கில் எதிரொலிப்பது போலிருந்தது.

சுதாகர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தபடி நிலைப் படியில் நின்றான், கழுத்திலிருந்த 'டை'யை நுனி விரலால் அவிழ்த்து விட்டவாறு.

“அத்தான்...அத்தான்!”

“என்ன வாசவி. அப்படி அதிசயமாகப் பார்க்கிறாய்? ஒஹோ!...பத்து மணிக்கே வந்து விட்டேனென்றா?... எனக்கு லீவ் இன்று. இந்த வாரம் என் ஆசைக் கனவு பலிக்கப் போகிறது, கண்ணே! எனக்கும், பம்பாய் ரமேஷ-க்கும் மரணக் கிணற்றுப் பந்தயம் நடிக்கப் போகிறது...ஆஹா!..வாசவி, உன்னுடைய அத்தான் தானாக்கும் வெற்றி பெறுவான்! பாரேன்!...உலகம் இந்தச் சுதாகரின் பெயரை நினை1வு கொள்ள வேண்டிய நாள் நெருங்கி வருகிறது...வாசவி!"

"அத்தான் ...”

இதற்குமேல் எதுவும் சொல்ல முடியாதவளாக அவள் திணறினாள், கண்ணீர் மட்டும் திணறவில்லை.