பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


சுதாகர் ஒன்றும் புரியாமல் மலைத்து நின்றான்!

20, ஜூலை , 1950.

சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த அந்தக் காலண்டர் தாள் வாசவியின் கண்ணுக்குள்ளே ரங்கராட்டினம் சுற்றியது.

'காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீதறுக!' என வாழ்த்தினார்களாம், கோவலன்-கண்ணகி தம்பதிகளை.

அப்படித்தான் சுதாகர்-வாசவி ஜோடியையும் மலர் தூவி பல்லாண்டு வாழ ஆசிமொழி தூவி வாழ்த்தினார்கள்.

20, ஜூலை, 1950-பொன்னாள் அவர்களுக்கு!

அந்த நாளிலே எத்தனை எத்தனையோ இன்பக் கனவுகள் கண்டாள், வாசவி! அவளுடைய கனவுகள் பலிக்கத் தான் பலித்தன. பொன்னை ஒரு தட்டிலும் பூவை ஒரு தட்டிலுமாகப் பாவித்துத்தான் கைத்தலம் பற்றியவளை சுதாகர் போற்றினான்; பேணிக்காத்தான். இரண்டு மூன்றானது. இந்திய ஜனத்தொகைக்கு ஒர் எண் பெருக்கம்! அப்போது, இன்னும் மிஞ்சிய ஆனந்தப் பெருக்கம்!

ஆனால் ....

இந்த 'ஆனால் ’ என்ற சொல்லில்தான் தம்பதிகளின் புதிர் சுற்றியிருக்கிறது.

வாசவி தினம் தினம் செத்துச் செத்துப் பிழைத்து வந்தாள்; அவள் மாங்கல்யம் செத்துச் செத்துப் பிழைத்து வந்தது.

புதிரின் புதிரா?...

வாசவியின் கணவன் சுதாகர் பி. ஏ. பட்டதாரி; தேடிவந்த வேலையை உதறிப்போட்டு விட்டு, யாரோ ஒரு