பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


அவ்வளவுதான், சுதாகருக்குக் கோபம் வந்தது. ‘'என் புகழுக்குக் குறுக்கே நிற்கிறாயா?...புறப்படும் போதே அபசகுனம் போலத் தடையுத்தரவு போடுகிறாயே?.சி!’ என்று அவள் கன்னத்தில் அறைந்துவிட்டான்; அந்த ஆத்திர வெறியில் பந்தயத்துக்கும் புறப்பட்டுவிட்டான்.

சுயநினைவு எட்டிப் பார்த்தது வாசவிக்கு. சற்று முன் அவள் நினைவில் வெறியாட்டம் போட்ட பயங்கர எண்ணங்கள், கணவன் தன்னை அடித்தது, எல்லாம் அவளுக்குப் பயத்தைப் போதித்தன. கனவில் கடப்பது மாதிரியாக உணரலானாள்.

உடனே பூஜை அறைக்கு ஓடினாள்; கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்: “ஈஸ்வரி, தாயே! என் கணவருக்கு எவ்வித விக்கினமும் வராமல் காத்தருள். அவருக்கே இந்தப் பந்தயத்தில் முதல் வெற்றியையும் கொடு, மகேஸ்வரி!" என்று பிரார்த்தித்தாள்.

பார்த்தால் பசி தீரும் குழந்தை பாபுவின் முகத்தில் தன் எரிமலை இதயத்தை ஒரு கணம் மறந்தாள். அப்போதுதான் மணி ஏழு அடித்தது. 'அத்தான் வர இன்னும் நாலுமணி நேரமாகுமே...அதுவரை நான் நரக வேதனையில்தான் உழலவேண்டுமா?...என்று உருகிப் போனாள்.

அப்பொழுது "அம்மா என்று ஒரு பையன் கூப்பிட்டான்; அவன் கையில் ஓர் கடிதம் இருந்தது.

"அம்மணி,

இன்றைக்கு உங்கள் கணவர் சுதாகருடன் மரணக் கிணற்றுப்பந்தயத்தில் போட்டிபோடப் போகிறவன் நான், சற்றுமுன்உங்கள் பதியிடம் மரண விளையாட்டை