பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


"ஓய் சகடயோகம்! உம் யோகம் இன்னிக்கு இந்த மினீட்டோட சரி. உம் கணக்கை செட்டில் செய்துகிட்டுப்போம்! சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையிங்கிற நல்லெண்ணம் உண்டாகாத வரையிலே, சமுதாயம் உமக்கு ஒரு நாளும் பரிவு காட்டவே காட்டாதுங்காணும்! என்னோட மானத்தைப் பணயம் வச்சு, உம்மோட பணத்தைப் பெருக்கிக்கிற ரகசிய நாடகம் இனியும் நடக்காதுங்காணும்! போம்!" என்று ஆத்திரம் சுழிக்ககூச்சலிட்டார். "இப்பவே உம்மைக் கம்பி எண்ண வச்சிருப்பேன். பாவம், பிள்ளைக்குட்டிக்காரராச்சேன்னு மன்னிச்சேன்!"

"சங்கிலிப் பயல் பொய் சொல்றானுங்க எசமான்!" - எண் சாண் உடம்பு ஒரு சாண் ஆனது!

சங்கிலி ஏராளமான நகையை உதிர்த்துவிட்டபடி, மானேஜர் சகடயோகத்தின் தலையைக் சகடக்காலை உருட்டுவதுபோல உருட்டி விட்டவனாக ஒரு முறைப்பு. முறைத்துவிட்டுப் பேசினான். "நானா பொய் சொல்லுறேன்? அநாதைப் பிள்ளையான நான் உங்க சொல்படி உங்க சோத்தை வந்து தின்னுருந்தேன்னா, நான் பொய் சொல்லித்தான் இருந்திருப்பேன். ஆனா, நான் இது வரைக்கும் சாப்பிட்டது எம் பணம் - நான் ரரக்கண் பகல் கண் முழிச்சுச் சம்பாரிச்ச பணம். ஒரு வேளைச் சோறுன்னு சாப்பிட்டுக்கிட்டும், சாயாவும் சுடு தண்ணியுமின்னு குடிச்சுக்கிட்டும் நாளை நாணயமா ஓட்டுற ஏழைப்புள்ளை நான். நீங்க போலிப் பணக்காரங்களோட சேர்ந்துக்கிட்டு, ரெண்டாம் ஆட்டம் முடிஞ்சதும், என்னெ வெளியே காவலுக்கு வச்சுப்புட்டு, நீங்க எல்லோரும் உள்ளே குடிச்சீங்கங்கற விசயமே எனக்கு இப்பத்தான் பட்டுச்சு. நான் சின்னப்புள்ளே. இதெல்லாம் இது வரை எனக்கு விளங்கல்லே!" என்று சொல்லி உள்ளே