பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

“ஒம், முருகா!" என்னும் எழுத்துக்கள் பளிச்சிட்டு மின்னின. வெள்ளி நிலவிலே அந்த வெள்ளைக் கட்டடம் மிதந்து கொண்டிருந்தது. பங்களாவின் வெளிப்புற வாசற்கதவில் பிணைக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலியில் ஒசையை உண்டாக்கியவாறு இருந்தது ஒரு காய். ஒரு கணம் அது தரையில் முகம் பதித்து மோப்பம் பிடித்தது. மறுகணம், கால்களை உதறிய வண்ணம் தலையை உலுக்கிக் குரைக்க எத்தனித்தது.

தானா நிலையத்தில் 'டாண், டாண்’ என்று மணி ஒலி பரவி எழுந்தது. அப்போது மணி பன்னிரண்டு. நட்ட நடுநிசி!

மண்ணில் பதிந்தெழுந்த பாதங்களின் மெல்லிய ஓசை இலேசாகக் கேட்டது. அதற்கு நேர் எதிரிடையாக நாயின் சத்தம் புறப்படத் தொடங்கியது. "ளொள்!. ளொள்!”

வந்த உருவம் பங்களாவை அண்டியது; பிணைக்கப்பட்டிருந்த பிராணியினைப் பற்றி லவலேசமும் கவலை கொள்ளாமல், அந்த உருவம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தது. திறந்த கதவை மூட ஓடியது இடது கை, வலது கையில் ஒரு பழைய பை ஊசலாடியது. காருக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த 'போர்டிகோ'வையும்