பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

இந்தக் கடிதத்தைப் படிக்கப் படிக்க அவருடைய ஆத்திரம் வேகமாக வளர்ந்தது. பற்களைக் கடித்துக் கொள்வதைத் தவிர அப்போதைக்கு வேறு வழியில்லை.

அன்று சென்றவன் இன்று நடுராத்திரியில் திரும்பியிருக்கிறான். அவன் திரும்பி வருவான் என்று அவர் கனவிலும் எண்ணியவரல்லர். அவருக்கு மட்டும் உடல் நலம் செம்மையாக இருந்திருந்தால், இந்நேரம் அவனே அடித்து கொறுக்கியிருப்பார். புதிய சமையற்காரனைக் கொண்டு பழைய சமையல் ஆளை வெளியேற்றி விட்டு மாடிக்கு வந்து படுக்கையில் சாய்ந்தார் ராமலிங்கம். ஆ! என்ன தப்பு செய்துவிட்டேன்!... அவனைக் கையும் மெய்யுமாகப் பிடித்து போலீசிலே ஒப்படைத்திருக்கலாமே...!” என்று ஒருகணம் நினைத்தார். மறு விநாடிதான் அவன் முன்பு எழுதி வைத்துப் போன கடிதத்தின் வாசகம் நினைவில் ஓடியது. உடனேயே அது வந்த வழியே திரும்பியது. ‘ம் இந்தப் புயலாவது பணத்தைத் திருப்பிக் கொண்டு வந்து தருவதாவது...! அடுத்த விநாடி என்ன தோன்றியதோ,படுக்கையிலிருந்து எழுந்தார் செட்டியார். கந்தப்பனைத் தேடிப் பிடித்துத் தானாவில் ஒப்படைக்க வேண்டுமென்ற புதிய துடிப்பு அவரை உலுக்கியது. எழுந்து கதவைத் திறந்தபோது, அவருடைய காலில் பட்டு விலகிய ஒரு புகைப்படத்தைக் கண்ணெடுத்துப் பார்த்தார். அவ்வளவுதான்; அவர் அந்தக்கணமே மயங்கித் தரையில் சாய்ந்துவிட்டார். அப்போது ‘திருப்பதி’ என்று அவர் வாய் உச்சரித்தது

“திருட்டுப் பயலே. நம்பிக்கைத் துரோகி"

ராமலிங்கத்தின் உள்ளம் அவரையும் மீறிய வண்ணம் இவ்வாறு கொக்கரித்தது. சில நாழிகைப் பொழுதுக்கு முந்தி அவர் கந்தப்பனை இகழ்ந்த சொற்களல்லவா