பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

இவை? மீண்டும், மீண்டும் இவை ஏன் செவிகளிடையே ரீங்காரம் செய்கின்றன..? அவரது முகம் ஏன் இப்படி விகாரமடைந்து வருகிறது? தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஏன் அவர் வேதனையின் எல்லை வரம் பில் நின்று தவியாய்த் தவிக்கவேண்டும்?

பட்டு மெத்தையில் அலுங்காமல், குலுங்காமல் கிடந்த அந்த நிழற்படம் செட்டியாரின் மனத்தில் நிழலாக அப்பிக்கொண்டிருந்தது. உள்ளம் சிலிர்த்தது போலவே, உடலும் சிலிர்த்தது. ஊனக் கண்கள் திறந்திருந்த மாதிரியே மனத்தின் கண்களும் விழித்திருக்கத் துடித்தன. மனம் துடித்தது; மனச் சாட்சி துடிக்கச் செய்தது; உன்னுடைய நூறு ரூபாய்ப் பணத்தைத் திருடிய கந்தப்பனை நீ திருடன் என்றாய், நம்பிக்கைத் துரோகி என்று ஏசினாய், பேசினாய்; அடித்து விரட்டச் செய்தாய்! ஆனால், நீ செய்த கம்பிக்கைத் துரோகத்தை மறந்துவிட்டாயா...?

கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த மனச் சாட்சியை ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் தளத்தில் அவர் தம் இன்ப வாழ்வை நிர்மாணித்துக் கொண்டிருந்தாரோ, அந்த வாழ்வு, வளம், வனப்பு அனைத்தும் இப்பொழுது ஆட்டம் காணத் தொடங்கின. எந்த ஒரு புகைப்படத்தைப் பார்க்கவும் மனத் துணிவை இழந்து அதை எங்கோ ஓரிடத்தில் போட்டுப் பூட்டி வைத்திருந்தாரோ, அதே படத்தை அவர் ஏன் தேடிப் பிடித்து எடுத்தார். பாதத்தில் சிக்கிய அந்தப்படம் அவர் மனத்தின் மனத்தையும் மிதித்துவிட்டதோ...? தெய்வத்தின் திருவிளையாடலா இது...?

மறைத்து மூடப்பட்ட ஆருண்டு இரகசியம்;

காரைக்குடியில் 'திருப்பதி மளிகைக் கடையின் முதலாளி திருப்பதியே தான். கல்லுக்கட்டி வட்டாரத்