பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

தில் நாலு பேருக்குப் பழக்கமான மண்டி அது. பிறந்த மண்ணில் வரித்த மனைவியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ராமலிங்கத்தைப் பிறிதோரிடத்தில் கைகட்டிச் சேவகம் புரிய வைத்தது. திருப்பதியைக் கண்டார்; கணக்கு வழக்குகளிலிருந்த திறமையைச் சாங்கோபாங்கமாக எடுத்துக் கூறினார். கல்லாப் பெட்டியடியில் இருந்த திருப்பதி மனம் இரங்கி ராமலிங்கத்திடம் கணக்குப் பொறுப்புகளையெல்லாம் ஒப்புவித்தார்.

திருப்பதியின் வியாபாரம் கூடி வந்தது. நாட்கள் கூடி வந்தன. தீபாவளி வந்து போயிற்று. பக்கத்து ஊர்களில் அங்கங்கே நிலுவை தங்கியது. வசூல் பண்ணி வருமாறு ராமலிங்கம் அனுப்பப்பட்டார். கானடுகாத்தானில் அ. முத்தையா அம்பலம் என்ற புள்ளியின் பேரில் இரண்டாயிரம் ரூபாய் பற்று நின்றது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட அந்த மனிதர் கையில் இருந்த பணத்துடன் கடன் உடன் வாங்கி இரண்டாயிரத்தை 'மால்’ பண்ணி ராமலிங்கத்தினிடம் கொடுத்தார். முதலாளி கைப்படவே ரசீது போட்டு அனுப்புவதாகச் சொல்லி விட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார் ராமலிங்கம். காரில் ஏறப்போன போது, முத்தையா அம்பலத்தின் வாழ்வு திடுதிடுப்பென்று முடிந்த கதையைக் கேள்விப்பட்டார். மனித மனத்தில் மிருகத்தன்மை ஓடியது. காரைக்குடியை மிதித்தார் ராமலிங்கம். முத்தையா அம்பலத்தின் அநியாய முடிவைச் சொன்னர். அந்தப் பணம் இனி வராதுங்க!’ என்றார். திருப்பதி நம்பினர். மறுதினம் ராமலிங்கம் மனைவிக்கு உடல்நிலை அபாயமாயிருக்கிறதாகத் தகவல் கிடைத்திருப்ப்தாகவும், புறப்பட அனுமதி வேண்டுமென்றும் வேண்டினார். புறப்பட்டார் அவர். அவருடன் புறப்பட்டது. இரண்டாயிரம் ரூபாய். அது 'ரெடிமேட்' கடைத்திறப்பு விழாவை கடத்தியது. இன்று ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு