பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஓடிவிட்டுத் திரும்பினான். அவன் கைகளில் சாக்கடை நாற்றம் வீசியது. ஐந்தாறு அழகிய பிராந்திப் புட்டிகள் வெறும் சீசாக்கள் இருந்தன அவனது கரங்களில். "இதெல்லாம் நீங்க கொல்லையிலே ரகசியமாய்ப் புதைச்சது தானுங்களே?" என்று கம்பீரமாக முகம் நிமிர்த்தி, சுருட்டை முடிகளை ஒதுக்கிவிட்டுக் கேட்டான் சங்கிலி.

சகடயோகத்தின் பொய்களை மன்னித்தார் பிள்ளை.

இப்போது தியேட்டருக்கு மானேஜர் சிவசங்கரன்.

சங்கிலிப் பயலுக்கு சம்பளம் நாற்பது ரூபாய்.

"ஏ.. எம். ஜியும், சிவாஜியும் ஒண்ணா நடிச்ச பழைய படம் டோய்!" என்று அந்த 'மாட்டினி ஷோ' வில் குரல்கள் நெரிந்தன, ஜனங்களும் தெரிந்தனர்.

தைப் பொங்கல்.

சங்கிலிக்குக் காலை முதல் வேலை நெட்டி வாங்கியது. புதுச் சட்டையும் புது டிரௌசரும் அவனுடைய அழகின் அணிகலன்களாயின. அந்த வெள்ளைச் சிரிப்புத்தான் அவனுக்குச் சேமநிதி.-'பாங்க் பாலன்ஸ்!'

மெய்கண்ட பிள்ளை அன்று தினம் தியேட்டருக்கு வருகை தந்து, சிப்பந்திகளுக்குப் 'பொங்கல் இனாம்' தந்தார்.

சங்கிலிக்குக் கிடைத்த இனாம் பத்து ரூபாய். வானத்துக்கும் புவிக்கும் குதித்தான் பயல். வாயெல்லாம் பல்.

ஜெமினி நடித்த புதுப்படம் கூட்டம் தாங்கவில்லை.'நிதி' வளர்ந்தது.

மனி பன்னிரண்டு.