பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143


ஐயோ அம்மா!...

அப்பா திண்டில் சாய்ந்திருந்தார். ‘முண்டா பனியன்’ அணிந்திருந்தார். தலை முடி காற்றில் அலைந்தது. நான் கூடத்தில் வந்து நின்றதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. முகஷவரம் செய்யப் படாததுடன் மட்டுமன்று, முகத்தில் கவலை ரேகைகளும் ஒடியிருந்ததைக் கண்டேன். எனக்கு உள்ளம் பதைத்தது. மூன்று நாள் இரவு பகலாக அடித்த காய்ச்சல் இப்பொழுதுதான் கொஞ்சம் படிங்திருக்கிறது. இங்நிலையிலே, மன உளைச்சலும் கூட்டுச் சேர்ந்தால், ஒருகால் காய்ச்சல் திரும்பினாலும் திரும்பிவிடுமோ? என்ன செய்வேன்? பகவானே!

“அப்பா!...”

அப்பா கண்களை மூடி மூடித் திறந்தார். இமை இழைச் சந்திப்புக் கோடுகளிலே ஈரம் சொட்டியது. எனக்கு நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. அம்மாவின் ஞாபகம் அண்டியிருக்க வேண்டும். நகர்ந்து நடந்தேன்; தாவணித் தலைப்பைக் கொய்தேன்.

“நீ இரும்மா!...” என்று சொல்லியபடி தன்னுடைய துண்டை எறிந்தார் அவர். அது சமயம், படமொன்று கண்ணில் பட்டது. அம்மா அவரருகில்தான் இருக்கிறாள்! விழிநீரைத் துடைத்துக் கொண்டார் அப்பா.

நீ ஏன் அம்மா போய்விட்டாய்?

அப்பாவுக்கு இனி ஆறுதல் சொல்ல யார் இருக்கிறார்கள் அம்மா?.

என்னுள் நான் அழுதேன். வேறு நான் என்ன செய்யட்டும்? என்னுடைய தொடரும் வினாக்களுக்கு, தொடராத பாங்கிலே விடை அளிக்க தெரிந்தவள் என்னை ஈன்றவள், ஒருத்தியேதான்! ஆனால் அந்தத்