பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

'தெய்வத்'தைத்தான் இந்தத் தெய்வம் பறித்துக்கொண்டு விட்டதே? கண்ணாமூச்சி ஆட்டத்தில் கண்கட்டப் பெற்றவளின் நிலையில் தத்தளித்தேன், இருளெனும் வியன்வெளி அரங்கை அமைத்துக் கொண்டு!

தெய்வமே!

"அம்மா காந்தி! நீ அழறீயாம்மா?..."

"ஊஹூம், இல்லையே!..... நான் அழலீங்களே அப்பா !..."

"இல்லே: நீ சும்மா சொல்லுறே!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க!... இந்தாப்பாருங்களேன்!"

இதழ்கள் முறுவல் கூட்டின; விழிகள் கண்ணீர் கூட்டின.

அப்பாவும் என்னைப் போலவேதான் திண்டாடினார். சுடுநீரும் சுமிழ்ச் சிரிப்பும் கண்பொத்தி விளையாடின போலும்!

"பத்தியம் சாப்பிடுறீங்களா, அப்பா?"

"கொஞ்சம் பொறுத்துச் சாப்பிடுகிறேன் காந்தி!"

கோடை மழைக்கு நேரம், காலம் இருக்க முடியாதல்லவா? வெய்யிலுக்கும் மழைக்கும் ஊடாக, சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு முறை துடித்து அடங்கியது.

வாசல் குறட்டில் அரவம் கேட்டது. எட்டிப் பார்த்தேன். தங்கசாலையிலிருந்து வந்திருந்தான் அவன். எங்கள் கடைப் பையன்: எடுபிடி! கும்பகோணம் அண்டா ஒன்ஙின் விலை திகையவில்லையாம்; யாரோ அயலூர் ஆள் கேட்கிறாராம். எண்பத்துநாலு சேர் நிறுவை நிற்கிறதாம். 'ஆ'விலாசம் போட்டு, 'இ' என்று மீண்டும்