உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


கொடிக்குக் காய் கணக்காது என்பாயே?

இது பழமொழி: கனத்தால் இனமாகுமாம்; பணத்தால் ஜனமாகுமாம்!

பூர்வீகம் எங்களுக்குப் புதுக்கோட்டைச் சமஸ்தானம். அங்கிருந்து உறவினர் ஒருவர் 'விருந்தாடி' வங்திருந்தார். அப்பாவைக் காட்டிலும் மூத்தவர்; ஆனாலும், திடகாத்திரத்தில், அப்பாவைவிட மட்டம். ஆள் மாப்பிள்ளைக் கணக்காகக் காணப்பட்டார். கையிலே காப்பிக் கொட்டைச் சங்கிலி. கழுத்திலே 'மைனர் சங்கிலி!' இந்த ஒரு சலுகைதான் ஒரு வேளே அவரை மாப்பிள்ளையாக மதிக்கவைத்ததோ! இன்னெரு விஷயம். அவருக்குப் போன மாதந்தான் கல்யாணம். இரண்டாங் கல்யாணம் நடந்தது.

அப்பாவும் அவரும் விருந்து உண்டார்கள்; தாம்பூலம் தரித்தார்கள். அமெரிக்க உளவு விமானம் ஏதோ சமீபத்தில் ருஷ்ய நாட்டுக்காரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது பாருங்கள், அதைப்பற்றி ஏதோ சந்தேகத்தைக் கிளப்பினர் வந்தவர். எங்கள் அப்பாவா அந்த விமா னத்தை இயக்கிச் சென்றார்? இல்லே, சுட்டவர்தான் என் தந்தையா? ஏதோ கேட்டார். ஏதோ சொன்னர்.

எனக்குச் சிரிப்பு மூண்டது.

"ராமையா! நீ ரொம்பவும் இளைச்சுப் போயிட்டியேப்பா! நான் சொல்றேன்; கேட்டுக்க . உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்சா , அதுவும் புருசன் வீட்டுக்குத் திருச்சிக்குப் பயணப் பட்டிடும். அப்புறம் நீ கிளப்புகளிலே சாப்பிடவேணும். இன்னம் மோசமாகிவிடும் உடம்பு. பேசாமல் நீயும் என்மாதிரி இரண்டாக் தாரம் கட்டிக்கிடு!...அதான் சிலாக்கியம்!" என்றார் என் சொந்தக்காரர்.