பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

என் மனம் வீம்மித் தாழ்ந்தது. சுவர் ஒண்டலில் நின்று, ஜன்னல் கம்பிகளினூடே என் செவிகளை அனுப்பினேன்.

அப்பா இதழ் மலர்ந்தார். நீங்க ஒண்ணு, என் கவலையெல்லாம் என்னோட குழந்தை காந்திக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க வேணும் என்கிறதுதான். காந்தி கழுத்திலே தாலி ஏறியிருச்சுதானத்தான் எனக்கு கிம் மதி வரும். என்னோட சாரதத்தின் ஆவியும் அமைதி காணும்! அப்பாலே, என்னைப்பத்தி எனக்குத் துளிகூட கவலை இல்லிங்க. கடை கண்ணியைக் கவனிச்சுக்கிட்டு ஒட்டலிலே சாப்பிட்டுக்கிட்டு காலத்தை ஒட்டிப் பிடுவேன்...சரி, வாங்க கடைத் தெருப்பக்கம் புறப்படலாமுங்க!”

இருவரும் புறப்பட்டார்கள். காலக் கடிகாரத்தின் முள் கண்ணுக்குக் காட்டாமல் தன்னுடைய பணியினே இயற்றிக் கொண்டிருந்தது.

என்னுள் ஏதேதோ சிந்தனைகள் கிளர்ந்தெழத் துடித்தன, அந்தச் சிந்தனைகளுக்குள்ளே நான் அமிழ்ந்துத் துடிக்கத் தொடங்கிய வேளேயில், வாசற்கதவு தட்டப்பட்ட ஓசை கேட்டது. கண்களிலே படர்ந்திருந்த இருளெனும் திரையைச் சுமந்தவளாகவே கடந்து சென்றேன். தாழ்ப்பாளைத் திறந்தேன்.

யாரோ ஒருத்தி நின்றாள் வயசு முப்பது இருக்கலாம்; இன்னும் சொல்லப் போனல், ஒன்றிரண்டு குறைவாகக் கூட இருக்கலாம். வறுமைச் சகதியில் முளைத்துப் பூத்த அழகுத் தாமரைப் பூவின் நினைவும் உதாரணமும் எனக்கு உண்டாயின. நான் கற்பனைக் கதை புனைபவளல்லள்; இருந்தும், ஏனோ-எப்படியோ உண்டாயின!