பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153


உன்னிப்புடன் வந்தவளே நோக்கினேன். அபிஷேகத்துக்குக் காத்து நிற்கும் சிலையைப் போன்று தோன்றினாள். என்னுள் என்னையறியாமலேயே பக்தி உணர்வு தோன்றியது. எனக்கே இந்நிலை விந்தையெனப்பட்டது. மீண்டும் பார்த்தேன். பார்த்த உருவிலே இன்னோர் உருவம் நிழலாடியது.

"அம்மா!"

வந்தவள் அழைத்தாள்.

என் அம்மா என்னே ஆட்கொண்டாள். எதிரே என் தாயைக் காண்பதைப் போலவே நான் உணரலானேன். பக்தியும் பாசமும் பெருக்கெடுத்தன.

அவள் ஏழையாம். ஆதரவு பிடிப்பாய் இருந்த அன்னேயும் அப்பாவும் அண்மையில்தான் காலஞ் சென்று விட்டனராம். மாம்பலத்தில் வீடாம். பிறந்த மண் தஞ்சாவூராம். பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பிழைக்க வழி கிடைக்குமா என்று அறிந்து போக வந்திருக்கிறாள்.

"உங்களுக்குக் கல்யாணம்..."

நெற்றித் திலகம் என் கேள்விக்குத் துணை கின்றது கழுத்தின் 'வெறுமை’ எனக்கு ஆத்ம பலம் ஈந்தது.

உதடசைத்தாள். கன்னி கழியாப் பெண் அவள் “உங்க மாதிரி இன்னும் அஞ்சாறு இடம் கிடைச்சால் என் வயிற்றுக்கும் குடக் கூலிக்கும் கட்டுபடியாகும். வறுமையை என்னலே தாளவே முடியலே. உயிரை மாய்ச்சிக் கிடலாம்னு கூட சில சமயங்களிலே தோணுது அம்மா" கண்ணீரின் வரலாறு.

அப்பாவை அழைத்தேன்; தோன்றினர்-மனக் கண்ணிலே வந்த உறவுக்காரர் சொன்ன ஆலோசனையும் வந்து நின்றது. இதோ, இந்த அபலப் பெண் .