பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


வீட்டுப் பிள்ளை. சங்கீதத்தாலே பயிர் பச்சை செழிப்பமா வளரும்னு வேறே பேப்பர்க்காரன் சொல்றான்!” என்றார்.

ஆனால், நீலாட்சியிடம் நான் உரையாடல் நிகழ்த்திய அந்தரங்கம் குறித்து அப்பாவிடம் எப்படித் தெரிவிப்பது?

அம்மாவை எண்ணித் தொழுதேன்; தந்தையின் கலம் காணவேண்டுமென்ற ஒரே குறிக்கோளில் நான் சுழன்றேன்.

“அப்பா”!

“அம்மா”!

வியர்வை வழிந்தது. நாசுக்காகச் சொல்லிவிட்டேன்.

அப்பா விரக்தி தொடுத்துச் சிரித்தார். “பணம் காசு நூறு இருநூறு கொடுத்திடலாம், வேணுமானால் வேறிடத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செஞ்சு வைக்கலாம், பாவம் நீலாட்சி!”

அப்பாவைப் பார்த்தேன். ஒப்புக்குச் சிரித்த முகம் ஏந்தியிருந்தார். சோகம் தவழ்ந்த முகத்தோடு சதா சர்வ காலமும் திகழும் அவரை நான் மறக்க முடியுமா? அம்மாவின் படத்தையே வெறித்துப் பார்த்த வண்ணம் வேதனையின் மடியில் சிரம் பதித்துக் கிடந்த நிகழ்ச்சிகள் ஒன்றா, இரண்டா?

வேளைக்கு ஒரு பேணுதலும் நாளைக்கு ஒரு போஷனையுமாகக் கவனித்து வந்த அம்மாவின் ஸ்தானத்தில் இருக்கத் தகுதி வாய்ந்தவள் லோட்சி ஒருத்திதான்! அதிருஷ்டம் தேடி வந்திருப்பதாகவே அவள் கருதுகிறாள்!

"அப்பா, நீங்க நீலாட்சியைக் கல்யாணம் கட்டிக்கிற தாய் வாக்குக் கொடுத்தால்தான் நான் மணவறையில் குந்துவேன்!”