பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

வீறு கொண்டு பேசினேன் நான்.

‘அம்மா!’

அலறினார் அவர்.

"நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் அம்மா! முதலிலே உன்னோட கல்யாணம் நடந்திடட்டும்!”

அப்பான்னா அப்பா...நல்ல அப்பா...தங்க அப்பா. நான் ' பேபி' ஆனேன்!

பெற்றவள் வாழ்த்தினாள். உடல் பதித்து மனம் பதித்துக் கை தொழுதேன். என் கழுத்தில் "மங்கல நாண்” விளங்கியது.

அத்தோநோடு நான் திருச்சிக்குப் புறப்பட வேண்டுமாம்!-நாள், நட்சத்திரம் பார்த்துவிட்டார்கள். புது மணமும் புது மனமும் பெற்ற நான் அந்த ஒரு கட்டத்தை நினைவுக்குக் கொணர்ந்தேன். ரத்தம் முழுவதும் மண்டைக்கு ஓடி மண்டை வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது 'என் அப்பாவைப் பிரிஞ்சு நான் எப்படி இருக்கப் போகிறேன்? அம்மாவை இழந்த நான் அப்பாவையும் பிரிஞ்சு அனாதையாக இருக்க வேணுமா? இதுதான் என்னுடைய தலை விதியா?...என்னுடைய கண்கட்டு இனிமே அவிழவே அவிழாதா? ' கடவுளே!.-புலம்பினேன்!

வீடு 'ஜே ஜே' என்றிருந்தது.

அப்பா வந்தார். அந்தி சந்திப் பொழுதின் அந்தமே தனிப் பண்பு கொண்டது. தம்முடைய திருமணத்துக்கு நாள் குறிப்பதற்குக் குறித்திருந்த கெடு இன்றுதான். லோட்சியை நான் மறக்கவே முடியாது! சின்னம்மா!... சித்தி!...இரண்டாவது அம்மா!'-மேனி சிலிர்த்தது.

“அப்பா" என்று நானே கூப்பிட இருந்தேன். அதற்குள் அவர் முக்திக் கொண்டார். "அம்மா காந்தி கொஞ்சம் இப்படி வாம்மா!"