பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அப்பொழுது...

"மச்சான்!"

"என்ன, முத்தம்மா?..."

காற்றும் மழையும் கலந்தடித்தது.

'சக்தி காற்றாகி விட்டாளா?'

‘உலகம் ஒடுநீராகிவிட்டதா?’

விளக்கு அணைந்தது!

“ஐயோ, மச்சான்!” என்று அலறினாள் முத்தம்மா.

ஒலக்குடிசை பிய்த்துக்கொண்டது. கம்பும் கழியும் சிதறி ஓடின.

முத்தம்மா மயங்கி விழுந்தாள்.

முருகேசன் விக்கி விக்கி அழுதான்.

மாயாண்டி சிரித்தான்—அகங்காரச் சிரிப்பு:ஓங்காரச் சிரிப்பு.

பத்துருபாய் நோட்டுகள் இருபது சிதறி ஓடின.

அருகில் நின்ற கையாட்கள் சிரித்தனர்.

ரத்தப்பலி ஏற்க ' வேளை' பார்த்துத் துடித்துக் கொண்டிருந்த அந்த ‘பிச்சுவா'வை வீசி எறிந்தான் மாயாண்டி.

ஏலே, காத்தா, தீத்தான்! பாத்திங்களா, ஆண்டவன்கூட எம்பக்கமாயிட்டாரு! இல்லாப் போன, பாவம் முத்தம்மா—முருகேசன் முதல் இரவு அன்னிக்கு சமயம் பார்த்து இப்படிப் புயலும் வெள்ளமுமா உலகம் சீரளியுமா?...எனக்கு கிடைக்கவேண்டியவளை அந்தப் பயல் முருகேசன் அடைஞ்சிட்டான். இதை பார்த்துக்கிட்டு