பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163


நான் சும்மாயிருப்பேனா? ம்! புறப்படுங்க... காற்று மழை ரெண்டு பேரையும் பலி வாங்கிறதுக்கு முன்னாடி நான் பழி வாங்கவேணும் ஜல்தி!...”

கத்தி மின்னியது. வெட்டிப் பாய்ந்த மின்னல்கள் கத்திக்கு அழகு கூட்டிற்று.

ஓடினான் மாயாண்டி.

காற்றும் மழையும்!.ஊழிக் கூத்தின் தொடக்கமா?.. முடிவா?..

உலகம் அழுதது; “கடவுளே! உனக்கு ஈவு இரக்கம் இல்லையா?...ஏழைபாழைங்களே ஏன் இப்படி ரெண்டாக் தடவையும் சோதிக்கிறே?...மூணு வருசத்துக்கு முந்தி உண்டான பசி இன்னங்கூடவா அடங்கலை?. ஐயோ! நாங்க இனி எங்கே போவோம்? என்ன செய்வோம்?. தெய்வமே! எங்களை ஏன் படைச்சாய்?...பாவி!

மாயாண்டியின் சிரிப்பு எல்லை கடந்தது. அந்தக் குடிசை தெரிந்தது-முத்தம்மா, முருகேசன் குடிசை!

"ம்...ஆரம்பியுங்க!" - கவண் கற்கள் குடிசையைச் சாடிப் பறந்தன.

கத்தியைக் குறிவைத்து வீசப்போனான் மாயாண்டி: வலது கை ஓங்கி உயர்ந்தது.

மறுகணம். “ஐயோ!” என்று அலறிக் கீழே விழுந்தான். அவனுடைய உடம்பின்மீது ஆலமரக்கிளே தவழ்ந்து கிடந்தது. ரத்த நீரை சிந்தியது வாயிலிருந்து கண்களைத் திறந்தான்; மர்ணம் விளையாடியது.வாலைக் குமரி போலே!