பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164


கைகள் இரண்டினையும் சேர்த்து, மிச்சம் மீதப்பட்ட பலத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ஆலமரக் கிளையைத் தரையில் தள்ளிவிட்டு, எழும்ப முயன்றான். முடியவில்லை. ரத்தநுரை புது வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. வஞ்சத்தின் நிறம் சிவப்பா?

முதன் முறையாகக் கண்ணீர்விட்டான். யார்?மாயாண்டி!

மனம் பேசியது? எனக்கேனுதான் இந்தப் புயலும் வெள்ளமும் தோணுச்சுதா...? என் மனசைத் திறக்கவா? இல்லே, நான் இந்த லோகத்தையே ஒரே முட்டாத்துறங் திறவேதான?...புத்தம் புது தம்பதிகளோட வாழ்வுக்கு முடிவுதேடி வஞ்சம் தீர்க்க மனசிலே நெனச்சேன்: இப்போ, ஆண்டவனே எனக்கு முடிவு தேட நெனச்சிட்டாரே ஐயோ!...பாவம், முருகேசனுக்கும் முத்தம்மாளுக்கும் இன்னிக்குத்தானே சாந்திக் கண்ணாலம்!... என்ன ஆனங்களோ, இந்தப் புயலிலே?.மண் குச்சாச்சே?...”

தெய்வமே, நீ வாழி!-சாவின் சங்நிதியிலாவது மனச் சாட்சியை விழித்துக்கொள்ளச் செய்துவிட்டாயே!

யானைப் பலம் வந்தது. மனித மனம் கூட்டுள் அடங்கிக்கொண்டது. ஒடினன்.

விண்ணக் கிறுக்கிச் சென்றது மின்னல். பாழடைந்த வீட்டில் தனித்தனியே கிடந்தார்கள் முருகேசன்-முத்தம்மா தம்பதிகள்!

மாயாண்டி இரண்டாம் முறையும் அழுதான்.

“நீங்க ரெண்டுபேரும் என்ன மன்னிப்பீகளா?...... பொழுது விடிய இன்னம் பத்து நாழிப் பொழுதுக்கு