பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

பரிசுகள் எத்தனை, படப்பிடிப்புக்கள் எத்தனை! விழாவுக்குத் தலைமை தாங்கிய புதுக் கலெக்டர் குழந்தைக்கு அளித்த ஆசிகள் எத்தனை!

வேலைக்காரி வேலாயியும் அவள் பிராணபதியான காத்தமுத்துவும் மணிக்கூண்டுப் பொடியன் விற்ற இஞ்சி முரப்பா'வை ஆளுக்கு ஆறு காசுக்கு வாங்கித் தின்ற தென்னவோ, உண்மையிலும் உண்மையே!

வேலாயிக்குச் செவ்வாய்க் கிழமைதான் சிந்தனையாக இருந்தது. இன்னம் ரெண்டே ரெண்டு நாளுதான் மிச்சம் கெடக்குது. மச்சான் கிட்டயிருக்குற காசையும் உண்டிக் கலயத்திலே இருக்குற சில்லறையையும் சேத்துச் செலவு செஞ்சு எங்க செவந்தியோட பொறந்த நாளே திருவிழா கணக்கிலே கொண்டாட வேணும்! என்னம்மோ, விரலுக்குத் தக்கின வீக்கம்! ஏழைக்குத் தக்கது எள்ளுருண்டை சின்னவருக்கு வந்து குமிஞ்சாப்பிலே பரிசுங்க எதுவும் எங்கக் குட்டிக்கு வராட்டியும், கடைசிப் பட்சம் எங்க எசமானி அம்மாவானும் ஏதாச்சும் இனம் தருவாங்க கட்டாயமா!’

கை ஓய்வான பொழுது.

வேலாயியின் பார்வைக்கு தாரிணிதேவி இலக்கானாள். தன் அபிலாஷையை பிட்டுப்பிட்டு வைத்துவிட்டாள் வீட்டுப் பணி இயற்றுபவள்!

ஆத்தாடி கேட்டீங்களா கூத்தை ஆளுன்னாலும் ஆளு நீ அம்மன்பேட்டை ஆளுங்கிறதை நிரூபிச்சிட்டீயேடி! போடி போ! உன் பொண்ணுக்குப் பிறந்த நாள் ஒண்ணு. தான் குறைச்சலாக்கும் வேறே யார் காதிலேயும் இதைச் சொல்லாதே! பைத்தியமின்னு உன்னே நினைச்சிடப் போருங்க!’ என்று கேலிச் சிரிப்புடன் பேசினாள் தாரிணி.