பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175


செவ்வாய்க்கிழமை.

எட்டடிக் குச்சுக்குள்ளே, செவந்தியைத் தாய் வீட்டு கல்ல விளக்கின் முன் அமர்த்தினார்கள். பூச்சூட்டினார்கள். தெய்வத்தை ‘நேந்து’ கொண்டு விபூதிச் சம்புடத்திலிருந்து விபூதித் துகளை எடுத்து மாறிமாறிப் பூசினார்கள் பெற்றவர்கள். “போதுமிங்கிர மனசை எங்களுக்கு நிதம் கொடு, தாயே!” என்று வேண்டிக்கொண்டார்கள். தாரிணிதேவி வற்புறுத்திக் கொடுத்த இனாம் நூறு ரூபாயோடு குழந்தைக்குக் கொடுத்த பட்டுக் கெளனையும் போட்டு மகிழ்ந்தார்கள்.