பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சங்கிலி அட்டகாசமாகச் சிரிக்கலானான், "காசு குடுய்யா!"...பாட்டு புக் தன்னாலே உம்மகிட்டே ஓடியாரும்!" என்றான் .

"காசு தான் சிக்தமூந்தி குடுத்தேனப்பா!"

"நீரா காசு குடுத்தீர்?... பொய் பேசறீங்களே ஐயா, போயும் போயும் இந்தப் பத்துப் பைசாவுக்கு!..."

பையன் இரைச்சல் போட்டான்.

பாட்டுப் புத்ததத்தில் இருந்த காதல் பாடல்களில் லயித்திருந்த ஆண்-பெண் ஜோடிகள் திரும்பினர்! 'ஒண்டிக்கட்டை'களும் தங்கள் கவனத்தை நிமிர்த்தினர். ஆக, சகடயோகத்தை ஆண்களும், அவர் தர்ம பத்தினியைப் பெண்களும் 'ஒரு மாதிரியாக'ப் பார்க்கத் தொடங்கினர். இந்தப் பார்வையைச் சகடயோகம் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருந்தும் கூட, அவரது தர்மபத்தினி அவ்வளவிற்குத் துணிவு பெற்றாளில்லை!

"பத்துப் பைசா பிச்சைக்காசு... இன்னொரு வாட்டி தான் குடுத்துடுங்களேன்!... இந்தப் பத்துப்பைசாவுக்குப் போயி, கேவலம் வாண்டுப் பயலோட வம்பு பண்றது எனக்கு வெட்கமா யிருக்குதுங்க!..." என்று 'நைஸாக'ச் சொன்னாள்.

"சட்... இரையாதே!" என்று சன்னக்குரல் அழுது வழிந்தது.

பட்டுத் தெறித்த பற்களுக்கு மத்தியில், ஆத்திரத்தைப் போட்டு மென்றுகொண்டு மறு பத்துப்பைசாவாகத் தடவி எடுத்து நீட்டினார் சகடயோகம். தெரிந்தவர்கள் முகங்கள் தெரிந்தன. பாவம், அவருக்கு வியர்வை கொட்டியது!

சங்கிலியின் கைப்பிடிப்பில் இருந்த ஒரு புத்தகத்தின் கனம் குறைந்தது. அட்டகாசமாகச் சிரிக்கும் பொறுப்-