பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


வதைத் தவிர மாற்று ஒன்றும் பிடிகொடுக்கவில்லை ராதைக்கு. ஆனால் அத்தனை எளிதில் அழத்தான் தெம்பு வந்து விடுகிறதா? தெம்பிருந்தாலும் அழத்தான் மனம் இடம் கொடுத்துவிடுகிறதா?

‘கண்ணா, ஏதுக்கு என் வீட்டை அழிச்சியாம்?” என்று கேட்டாள் ராதை தணிந்த தொனியில். பூமனதில் வீசிய புயலின் கொந்தளிப்பு, குரலில் காணோம்.

“பதிலுக்குப் பதில் செஞ்சுட்டேன், பார்த்தியா?”

கண்ணன் இப்படிப் பதில் சொன்னான். அவன் குரலில் ஆத்திரம் எடுப்பாக இருந்தது.

“நீ சொல்றது எனக்கு விளங்கலையே...”

“எப்படி விளங்கும்? நான் கட்டின வீட்டை மாத்திரம் நீ கெடுத்துடலாம். பதிலுக்கு நான் செஞ்சா மாத்திரம் நோகிப் போயிடுமோ?”

கண்ணனின் வார்த்தைகள் குழந்தை ராதையை ஆச்சரியத்துக்குள்ளாக்கின. ஏனென்றால் அவன் சொன்னதுபோல மணல்வீடு கட்டி விளையாடவே கிடையாது. அன்றைக்குச் ‘சடு குடு’ விளையாட்டுதான் அங்கம் வகித்தது. வீண்பழியைத் தன்மீது சுமத்துவது கண்டு ராதை பொறுமினாள்.

‘நானா உன் வீட்டை அழிச்சேன்? நம்ப மணல்வீடு கட்டி விளையாண்டு ஒரு வாரம் ஆகப் போகுதே. நல்லா யோசிச்சு எதையும் செய்யணும். ஒருவேளை கனா ஏதாச்சும் கண்டு உளறுறியா...?’

‘கனா’ என்றதும் புளிச்சென்று எதையோ ஒன்றை ஞாபகப்படுத்திக் கொண்டவனாக ஒருகணம் செயலிழந்தான் கண்ணன். அவன் செய்த தவறை―வீணாக ராதையைக் குற்றம் சாட்டிய பழியை ― அப்போது நன்கு உணரலானான்.ஆஆஆ