பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16
சிவன் தந்தது...!

ண்ணைப் பொன்னாக்கும் வண்ணப்பொழுது; தங்கத் துகள்கள் தரணிதனை அந்தம் மிகுந்த கனவுலகாக உருமாற்றிக் கொண்டிருந்த ஆனந்தமான வேளை. பின், இளஞ் சுடரொளியிலே கனவுகள் சதிராடக் கேட்கவா வேண்டும்?

தேதிப்படத்தாளைக் கிழித்துவிட்டு, அன்றையத் தேதியையும், அது ஏந்தி நின்ற கிழமையையும் பார்த்தாள் கல்யாணி அம்மாள். இனம் புரியாத மகிழ்வும், இனம் புரிந்த இன்னலும் சமன் அளவிட்டுத் தோன்றலாயின. தும்பைப்பூ நிறப்புடவையின் முகதலைவில் கண்ணீரின் முத்துச்சரம் ஒடுங்கியது, யோகியாரின் உள்ளமென! ஆளோடியைக் கடத்தினாள் அவள். கதிர்களின் சதுராட்ட விளையாட்டு நடைப் பகுதியிலும் நடந்தது. அவள் ஏறிட்டு விழித்தாள். விழிவிரிப்பில் படர்ந்த உருவத்தைக் காண எதிர்ப்புறம் கண்ணோட்டம் செலுத்தினாள் அவள். பெரிது செய்யப்பட்ட அந்தப் புகைப்படம் அண்டியது. கால் பாதங்கள் தத்தளித்தன; தடுமாற்றம் கண்டன. தரையில் பாவிய ஸ்மரணை இல்லை. கால்விரல்கள் ஈரம் ஏந்தின. ‘அத்தான்!...நான் செஞ்சது குத்தம்தானா? இதைத்தவிர; வேறுவழி ஒண்னுமே எனக்கு மட்டுப்படலேங்களே?...நான் என்ன செய்வேன், பாவி?...’வாய்ப்புலப்பமும், சுடுநீரின் குழப்பமும் அவளு