உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

டைய அறிவுணர்வைத் தட்டிப் பறித்துக் கொண்டன போலும். தாலாட்டுப் பொம்மையைப் பறிகொடுத்த விளையாட்டுக் குழந்தை போலச் செருமிச் செருமி அழுதாள்!

‘அம்மா...!’ என்று அழைத்தபடி கோமதி வந்தாள். அவள் மட்டுந்தானா வந்தாள்? அவளைத் தொடர்ந்து அன்பும் பாசமும் வந்தன; புன்னகையும் புத்தெழிலும் வந்தன. அவள் கையில் கடிதமொன்று இருந்தது. “அத்தான் உனக்கு எழுதியிருக்காங்க, அம்மா!”

அன்னை கடிதம் ஏந்தினுள்.

ஆவணி இருபத்தேழாம் தேதி முகூர்த்தம் வைப்பதற்கு ‘வேளை’ பொருந்தியிருக்கிற தென்றும், அன்றைக்கே கலியாணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளேச் செய்யுமாறும் எழுத்துக்கள் ஓடியிருந்தன. ஓடக் காணும் பூம்புனல் வெள்ளமாய் அவள் நிறைவு அடைந்தாள். நிறைவு ஆனந்தத்தைக் காட்டிற்று; ஆனந்தம் அமைதியைச் சுட்டியது; அமைதி கண்ணீரைக் கூட்டியது. கண்ணீரிலே தெய்வத்தைத் தரிசித்தாளோ?

சற்றைக்கெல்லாம் அவளது மனம் மீண்டும் அலை பாயத் தொடங்கிவிட்டது. தாலி கொடுத்து, ‘கொண்டவன்’ என்னும் ஸ்தானத்தை ஏந்திய ‘அந்தநாள்’நினைவில் குதித்திருக்கவேண்டும்; கொண்டவன் தாலியுடன் கொண்டோடிய ‘அந்தநாள்’ நெஞ்சத்தில் குத்தியிருக்க வேண்டும்! சதா சர்வகாலமும் சிணுங்கிக்கொண்டிருக்கும் கைக்குழந்தைகள் போலவேதான் இந்த நினைவுகளும்!

“அம்மா, ஆசாரி வந்திட்டாரு, அம்மா”!

குரல் கொடுத்தாள். கோமதி. நிலைப்படியைக் கடந்து வந்த ஆசாரியைக் கண்ட சடுதியில், அவள் தூணுக்குத்