உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188


“பேஷா!”

“உன் அத்தானுக்கும் பிடிச்சிருக்குமில்லே?”

“உங்க அண்ணன் பிள்ளை சமாச்சாரம் உங்களுக்குத் தானே அம்மா தெரியும்?”

“எம் பொண்ணாச்சே! பேச்சுக்குக் கேட்கனுமா?”

சிங்காரத்துக்கும் சிரிப்பு, வாய்ப்பிடியில் பிடிபட மறுத்தது.

“கணக்கு எம்பிட்டு ஆகுது”?

ஆசாரி துண்டுச் சீட்டு ஒன்றைச் சமர்ப்பித்தான். நகைகளின் மொத்த எடை, பிறகு உருக்கப்பட்டதும் உருவான தங்கக் கட்டிகளின் எடை, கழிவு―சேதார எடை, கற்கள் விலை, கூலி-இப்படிக் ‘கூட்டுப்புள்ளி’ காட்டிற்றுக் கடுதாசி.

மூன்றுநாள் கெடுவைத்தாள் வீட்டுத்தலைவி.

பதில் பேசவில்லையே சிங்காரம்!.

கூடப்பிறந்தவரிடமிருந்து வந்துசேர்ந்த கடிதம், “உன் இஷ்டப்பிரகாரமே, உன் மகள் கோமதி ஜாதகமும் என் மகன் சேதுவின் ஜாதகமும் கனகச்சிதமாய்ப் பொருக்திவிட்டது. ஆவணி பிறந்தவுடன், கலியாணத்தை முடித்துவிட வேண்டியதுதான். முகூர்த்த நாளைப்பார்த்து அப்புறம் எழுதுகிறேன்!” என்ற சேதியை அஞ்சல் செய்தது; ‘அஞ்சேல்’ என அபயம் தந்தது.

ஆவணி பிறந்ததோ, இல்லையோ, பெற்றவள் உற்ற மகளை அழைத்து அவளிடம் சொன்னாள்: “அம்மா கோமதி உன்னைப் பெத்தவகிட்ட நீ எதொண்ணையும் ஒளிவு மறைவாக வச்சுக்கிட வேணாம். உனக்கு என்னென்ன நகை நட்டு வேணுமெங்கிறதைச் சொல்லிப்பிடு. உன்னோட சிநேகிதிங்க யாரானும் போட்டிருக்கிற தினுசு