190
பெற்ற அந்தத்தாலி இருந்தது, ஆனால், அந்தத் தாலிக்கு உடையாளி போய்விட்டார், பாவம் பாவமும் புண்ணிய மும் ஊழ் விளையாட்டு!
நினைவு மீண்டது.
“ஆசாரி சிங்காரமுங்க அம்மா!” என்று தன்னை அறி முகம் செய்வித்து நின்றான் வந்தவன், தாலியைப் பெட்டியில் பக்தியுடன் வைத்தாள்; பிற நகைகளை வெளியே எடுத்தாள். மகள் கொண்டு வந்து காட்டிய ‘மாதிரிகளை’யும் முன்னே வைத்தாள். தன் கை வசமுள்ள நகைகளை உருக்கினால், மகள் விரும்புவது போலச் செய்ய இயலுமா வென்று கேள்விக்குறியைப் போட்டாள் அவள்.
“நகைங்களை உருக்கி எடை பார்த்துத் தானுங்க சொல்ல முடியும். நீங்க சம்மதிச்சா, நான் இதுகளை வீட்டுக்குக் கொண்டுபோய் உருக்கி, எடை போட்டுக் காண்பிக்கிறேனுங்க.. என்னைப்பத்திப் பக்கத்துத் தெரு ‘மு,லெ’ வீட்டிலே கேட்டுக்கிடுங்க அம்மா,” என்று உரைத்தான் அவன். அவன் பேச்சு அவனது நாணயத்துக்கு உரைகல் ஆனது. நம்பினாள், சென்றான். திரும்பினான். “இன்னம் இரண்டு சவரன் எடை தங்கம் தேவைப் படுதுங்க.. இரு நூறு ரூபாய் பணம் கொடுத்தாலும், தங்கம் வாங்கலாங்க!...” என்றான்; எடைப் படிக்கற்களையும் தராசையும் தரையில் வைத்தான்.
கல்யாணி அம்மாளுக்குத் திகைப்பு வளர்ந்தது. ‘தெய்வமே!’ என்று நெடு மூச்சைப் பிரித்தாள், பிரஹதீஸ்வரர் ஆலயம் மணி முழக்கம் செய்தது. அவளுக்கு ஓர் ஆலோசனை புறப்பட்டது, புறப்பட்ட நடுக்கத்தைப் போர்த்தி மூடியவளாக, உள்ளே சென்றாள். சற்றுமுன் தரிசனம் தந்த தாலியைத் தொட்டாள். தொட்ட கை நடுங்கியது. “அத்தான், என்னை நீங்க மன்னிச்சிருங்க. நம்ம பொண்ணு நல்ல காரியத்துக்குத்தான் இந்தத் தப்-