பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

195

னுங்க. கடவுள் புண்ணியத்தாலே எம் மகள் பெற்றுப் பிழைச்சது. ஆனா, இங்கே வந்து பார்க்கையிலே, உங்க கல்யாணம் முடிஞ்சிருக்திச்சு. பிழைப்புக்காக அலைய வேண்டி வந்திச்சு. கடைசிலே, உங்க பரிதாபமான நிலைமையைக் கேள்விப்பட்ட நான் கழுத்திலே கத்திபட்ட ஆட்டுக் கிடாமாதிரி துடிச்சிப் போனேனுங்க. எங்கையாலே உங்களுக்குத் திருமங்கலியம் செஞ்சு தரத்துக்கு எனக்கு அதிர்ஷ்டம் வாய்க்காட்டியும், உங்க பொண்ணுக்காச்சும் கட்டாயம் தாலி செஞ்சு தந்துப்பிடவேணும்னு ஆண்டவனை எண்ணி உறுதி எடுத்துக்கிட்டேனுங்க. என்னைக் கானும் ஒருநாள் உங்ககிட்ட வந்து, விவரத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்கணும்னு இருந்தேன். இப்போ வேளை கூடியிருக்குதுங்க!...இந்தாலே இருக்கானே சிங்காரம். இவன் எம்மவன்!...இவன் மூலம் உங்க பொண்ணு கல்யாணச் சேதியை அறிஞ்சேன். அம்மா உங்ககிட்ட ஒரே ஒரு வரம் வாங்கிட்டுப் போகத்தானுங்க இப்போ வந்திருக்கேன். எங்க குலதெய்வத்தை கேந்துக்கிட்டு, என்னோட சொந்தத் தங்கத்திலே செஞ்ச தாலிஇது! உங்க அண்ணன் வீட்டிலேயும் என் ஆசையைச் சொல்லியனுப்பிச்சேன். இதுக்குப் பதிலா நீங்க எனக்கு யாதொண்ணும் தரப்பிடாதுங்க. இந்தத் தாலியையே உங்க மகளுக்குப் பூட்டறதுக்கு சரியின்னு ஒப்புக்கிட்டீங்கண்ணா, அப்பதானுங்கி தாயே என் மனசு ஆறும்!...”

ஆண்டபெருமாள் விம்மினார்.

“அம்மா!”

“என்னாங்க!”― கண்ணீர் பொழிந்தாள். அவளுடைய வலது கையில் புதுத்தாலிமின்னிப்பளிச்சிட்டது!

ஆசாரி இருமினார்: “இன்னொரு சேதிங்க!.. இந்தாங்க, இது உங்க தாலி!... இதைப் பத்திரமாய் வீட்டில் வச்சுக்கிடுங்க. உங்க மகளுக்குச் செஞ்ச நகைகளுக்குக் குறைஞ்ச்