உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

“ஆரம்பிக்கிருயா வாஸந்தி?.”

“ஆகட்டும்,' என்பதற்கு அடையாளமாக வீணேயின் கம்பிகளே கெருடிவிட்டாள். விரல்கள் தந்திகளில் இழைய கானம் காற்றில் மிதந்தது.

"‘தந்தியில் எழுவது நாதம் . சிந்தையில் எழுவது நாதம்......" தளிர் விரல்கள் வாத்தியத்துடன் விளையாடத் துவங் கின. தொடர்ந்து வாசித்துக்கொண்டேபோனள். மூர்த்தி தன்னே மறந்து, சூழ் கிலேயையும் மறந்து கான லயத்தில் ஒன்றிப்போய் ரசித்த வண்ண மிருந்தான்.

மின்னல் கொடி படரும் ஒரு விடிையில் என்ன தோன்றிற்றாே, பாட்டு முடிவதற்குள் திடீரென்று மூர்த்தி எழுந்து வெளியே போய்விட்டான். இதைக் கண்ட வாஸந்தி தணலைத் திண்டியவள் போன்று நடுங்கிப் போனள். தன் அத்தானின் இத்தகைய செய்கை வியப்பை அளித்தது. அவள் மனம் அஞ்சி அதிர்ந்தது. இந்தச் சம்பவத்தைக் குறித்து அதன் பின் தம்பதி களிடையே எவ்வித வியாக்கியானமோ அல்லது சமாதான உடன்படிக்கையோ உதயமாகவில்லை; நிகழவுமில்லை. அப் புறம் ஒன்றிரண்டு நாட்கள் வழக்கம்போல வந்தன, ஒடி விட்டன. அன்றாடம் நடக்கும்-கடக்கவேண்டிய சிரிப் பும் கேளிக்கையும் இடம் பெற்றன; களித்தனர். -

அன்று இரவு மூர்த்தி வெளியே சென்றிருந்த சமயம் வாஸந்தி தனித்திருந்த அவ்வீட்டின் பயங்கர அமைதி அவளே என்னவோ செய்ய ஆரம்பித்தது. அன்று விணே வாசிக்கையில் நிகழ்ந்த சலனம் அவள் மனத்தில் அப் படியே ஆழப் பதிந்திருந்தது. காரணமின்றி அரைகுறை வாசிப்பில் அவ்விதம் மூர்த்தி திடுதிப்பென்று வெளியே எழுந்து சென்றதன் அர்த்தம் மர்மமாகவே பட்டது