203
வாஸந்திக்கு. ரில் கணவனிடம் இதைப்பற்றிக் கேட்க வும் விரும்பவில்லை. இருப்பினும் தன்னைப்பற்றி ஏதா கிலும் தவறுபட எண்ணி விட்டிருப்பாரோ? அவள் மனம் ஒரு கிலேயில் அடங்காது அலைபாய்ந்து தத்தளித்தது.
அன்று வீணே வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் பட்டபாடு அவள் ஒருத்தியே அறிவாள். திரும்பவும் வீணேயை மீட்டிவிட்டதும், தன் தமக்கையின் நினைவு அவள் இதய வீணேயையே நெருடிவிட்டதை மூர்த்தியால் உணர்ந்திருக்க முடியுமா? ஒவ்வொரு தவணையும் கானம் கூட்டும் சமயம் அவள் உயிரே போய்த் திரும்பும். கண்கள்கலங்கும். இந்த மாற்றத்தைத் தன் அத்தான் கவனித்து விட்டால்.........?-அவள் சந்தர்ப்பத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள்.
வாஸந்தி எதிரேயிருந்த சுலோவின் படத்தினருகே சென்று சிறு குழந்தையைப் போலத் தேம்பினுள். திரும்பவும் ஒருநாள் தன் கணவன் அந்த வீணையை வாசிக்க உத்திரவு பிறப்பித்தால் தன் கதி என்னகும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தாள்; அன்று தன் கணவன் லவலேசமும் சலனமற்று ரசித்துக்கொண்டிருந்த காட்சியையும் மனத்தில் நினைவுபடுத்திக் கொண்டாள்.
ஆனால் மறுமுறை அவ்வீணேயை கையால் திண்டவும் கூடாது என்பதாக அசைக்க முடியாததொரு எண்ணத்தை உற்பவித்துக்கொண்டாள் வாஸந்தி. உடனே பித்துப் பிடித்தவள் போல உள்ளே ஓடினாள். கண்முன் காட்சி தந்த வீணேயை எடுத்து படீர் என்று அதன் தந்தி ஒன்றை அறுத்துவிட்டாள். அப்போது அவளது இதயமே அறுந்துபோனது போன்ற ஓர் உணர்வு எழுந்தது. மறு நிமிஷம், அத்தான் ஊரிலிருந்து வந்து இந்த நிகழ்ச்