பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2
காதல் எனும் பொய் விளையாட்டு

குமண வள்ளலின் சரித்திரத்தைக் கதையாகச் சொல்லி முடிக்கட்டுமே யென்று காத்திருந்த மாதிரி, பள்ளிக்கூட மணி ‘கண கண’ வென ஒலித்தது. மணிச் சத்தம் கேட்டதுதான் தாமதம், அவரவர்கள் புத்தக மூட்டைகளை எடுத்துக்கொண்டு கிளம்பத்தொடங்கனார்கள். ‘டெஸ்க்கு’கள் அதிர்ந்தன; பெஞ்சுப் பலகைகள் ‘கடமுட’ வென்று ஓசை செய்தன. மதியச் சாப்பாட்டுக்குப் புறப்படும் பதட்டம்; பசிக் கோளாறு என்று தான் சொல்லவேண்டும். சின்னப் பிள்ளைகள்...... இருக்கதா, பின்னே?

அந்தக் கைப்பிரம்புக்கு வலு அதிகம் என்பதைக் காட்டிலும், மகிமை கூடுதல் என்பதே பொருத்தம். அதையெடுத்து மேஜை டிராயருக்குள் திணித்துவிட்டு, சேலைத் தலைப்பை எடுத்து ஒரு பக்கத்தின் நுனி கொண்டு நெற்றி மேட்டிலும் கன்னக் கதுப்புகளிலும் மூக்கின் முனையிலும் ஒற்றி எடுத்தாள். கோடை என்றால் வியர்வைக்குப் பஞ்சமா? பஞ்சாய்ப் பறந்தது அயர்வு. டவலை மடித்துக் கைக்குள் இடுக்கியவளாக இருக்கையைப் பிரிந்தாள். ‘பச்சைமண்’ ஏந்திச் சென்ற தாய் ஒருத்தியின், காட்சி அவளுள் பாசத் துடிப்பை மீட்டிவிட்டிருக்கவேண்டும். நீள் மூச்சுப் பிரிங்தது. உதட்டுக்கரைதனில் உல்லாசப் பவனி வந்தது உலர்ந்த மூரல். வாழ்க்கையின்