33
“காலங் கார்த்தாலேயே எங்கே இந்தப் பூச்சரம் கிடைச்சுது, மச்சான்?”
“வயல் காட்டுப்பக்கம் போயிட்டுத் திரும்பயிலே, பண்டாரத்தோடத் தோட்டம் வந்துச்சு, காலையிலே நான் தான் போணி பண்ணினேன். உங்க ரெண்டு பேர் ஞாபகமும் வந்துச்சு. ஆளுக்குக் கொஞ்சம் வாங்கியாக்தேன். வெள்ளிக்கிழமையாச்சே!.குளிச்சி முழுகி மஞ்சள் பூசி தலைவாரி பூமுடிச்சுகிடுவீங்களே!...” என்று விளக்கம் தந்தான் முருகன். வள்ளி―தேவானை இருவருக்கும் ஆனந்தம் பிடிபடவில்லை. குதூகலித்தார்கள்.
தை மாதம் பிறந்துவிட்டது.
ரங்கூன்காரர் வீட்டுப் பூரணிக் காளையை மஞ்சிவிரட்டில் பிடித்து வெற்றிகொண்ட புகழின்போதை முருகனின் இதழ்களிலே நெடி பரப்பிக் காட்டிக் கொண்டிருந்தது. சல்லிக் கட்டுக் காளையின் காவி வண்ண மேனி தழுவி, கூரான சாயம் தோய்ந்த கொம்பு பற்றி, முடித்துவிட்டிருந்தப் பரிசுப் பொருளான சாயத் துணியையும் பத்து ரூபாய்ச் சலவைத்தாளையும் அவிழ்த்து எடுத்துக்கொண்ட காட்சி மனக்கண்ணில் தோன்றியது! அதை அவனால் மறக்க இயலுமா?
‘ஏமூற்றுக் கழிந்த மள்ளரை’ புறநானூறு சொனனது உண்டு. ஆனால், முருகன் முன் தோல்வி கண்டு, காளை முன் களைத்துப் போய்விட்ட கீரமங்கலத்துக் ‘காளைகள்’ இருவரையும் அவன் கண்முன் கண்டிருக்கிறான். கெலிக்கவேண்டும் என்ற ஒரே குறிப்பு நோக்கின் மையப்புள்ளியில் நின்றவாறு, முருகனுக்குப் போட்டியாகப் போராடிய காளிமுத்து, வீரமுத்து ஆகிய இரண்டு வீர இளைஞர்களை அவன் மறக்கவே முடியாது.
வெற்றித் திருவின் வீரப் பெருநோக்கிலே பெண்மையின் இருவேறு நிழல்கள் ஒளி சிந்திச் சிரித்தன; அந்த்ச்