பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36


மனம் பலாப் பழமாக மாறியபின் நினைவுகள் ஈக்களாக உரு மாறுவது இயல்புதானே.

வள்ளியின் கழுத்துச் சங்கிலியில் பதித்திருந்த ‘டாலர்’ ஒருதரம் எம்பித் தணிந்தது. ‘மூத்தவ நான்; நியாயமா மச்சான் எனக்குத்தானே கெடைக்கோணும்?..’

வள்ளியின் கவனம் உடன்பிறப்பை நாடி ஓடியது. ஆழ்ந்து சிந்தித்தது.

‘அல்லி அரசாணி மாலை’யில் கருத்துப் பதித்திருந்தாள் தங்கச்சி. கைவிளக்கின் புகை தங்கமுகத்தை மங்கச் செய்ய முயற்சி செய்தது. வாகைமாலை புனைந்த பெருமை தேவானையின் சிந்தூர நிறத்துக்குத்தான் உடைமை.

தேவானைப் பொண்ணு! கேட்டியா கூத்தை?... ஒக்கப் பொறந்தவுக நீங்க. ஒங்க சாதகம் ரெண்டும் ஓங்க முறைக்கார் மச்சான் சாதகத்தோடு அச்சடிச்சு வச்சாப்பிலே ஒட்டுதலா இருக்குதாம். சேதி அனுப்பியிருக்குது நம்ப சம்பந்திபுரத்து வேலாயி. ஆனாக்க, இப்பதான் தாரடிசாமி வேடிக்கைக் காட்டப் போவதின்னு எம் மனசிலே ஓடுது. எந்தெரியுமா? ஒங்க ரெண்டு பொண்ணுகளிலே யாராச்சும் ஒருத்திதான் காத்தனாரு வீட்டிலே வாக்கப்பட எலும்; வள்ளி காதிலேயும் இதைப் போட்டுப் புட்டேன். ஓங்கிட்டேயும் சொல்லியாச்சு. பெத்த ஆத்தா நானு. எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்னுதான். இந்தக் கண்ணாலம் காச்சி விசயமா உசிருக்குசிரான ஒங்களோட பாசத்திலே ரவை விரிசல்கூட காணப்படாது. அதான் ஒங்க அப்புசரு கவலையும் எங்கவலையும்;...வார திங்கக்கெழமை மாப்பிள்ளை முடிவு அனுப்புறாகளாம்!... வா, தேவானை!...சாப்பாடு தயாரா இருக்கு, அக்காளையும் ஒரு கொரல் அளைச்சிக்கிட்டு ஒரே எட்டிலே ஓடியாக்திடும்மா!...”