பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


மறுநாள் பொழுது விடிந்தது.

“ஆத்தா!...குளமங்கலம் மணியக்காரர் பொண்ணு அஞ்சலையை நான் கட்டிக்கிடுகிறேன்! நீ கவலைப்படாதே, ஆத்தா!”

ஈன்றெடுத்த தாய்க்கு ஏதும் புரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தாள்.

திருவம்பலச்சேர்வையின் வீட்டில் கடந்த திருமண விருந்தில் கலந்துகொண்டு ‘மொய்’ எழுதிவிட்டுத் திரும்பிய முருகன் என்னென்னவோ எண்ணமிட்டான்!

“என் மனசு இப்பத்தான் அடங்கியிருக்குது’ என் கடமையும் தீர்ந்திடுச்சின்னுதான் நெனைச்சிருக்கேன். ‘வள்ளி―தேவானை’ ரெண்டோட அன்பும் என் நெஞ்சிலே வாழணுமிங்கிறதுதான் என் ஆசை, கனவு, எண்ணம்―எல்லாம்!...கூடப் பொறந்தவங்க பாசத்திலே என்னாலே எந்த இடைவெளியும் உண்டாகப்புடாதின்னு தான், வள்ளியை வீரமுத்து கையிலேயும், தேவானையை காளிமுத்துக் கிட்டேயும் ஒப்படைச்சேன்!...அக்கா―தங்கச்சியை சமாதானப்படுத்தி, இந்தக் கண்ணாலங்களை முடிச்சுவைக்க நான் பட்டபாடு எனக்குத்தானே தெரியும்?...ஊரே என் நடத்தையைக் கண்டு அதிசயப்பட்டுக் கெடக்காம்! ஆனால் சொக்கப்பச்சையோட மதிப்பைக் காட்டியும், ஒசத்தியா வள்ளி―தேவானை அன்பை நான் மதிச்சிருக்கிறது அவுகளுக்கு எங்கே தெரியப்போவுது? பெத்தவுங்க என் முடிவைக் கேட்டுக் கிலேசப்படப் போறாங்க!...‘வள்ளி, தேவானை! இனிமே நீங்க ரெண்டு பேரும் காலமெல்லாம் என் நெஞ்சிலேயும் நெனைப்பிலேயும் வாழப்போறீங்க; ஓங்க நெனைப்புத்தான் என்னை அக்கரைச் சீமையிலேயும் வாழவைக்கப் போவுது...”