பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

காவல் வைத்து, பின்பு எண்ணெய் ஆட்ட வங்திருக்கும் எள் அல்லது நிலக்கடலையைச் செக்கில் போட்டு, கரை தள்ளிச் சேர்த்து, உலக்கையை ‘வாகு’ பார்த்து, ‘வசம்’ அமைத்து நிறுத்தி முடித்தாரென்றால், “டேலே, ஓட்டு டாலே பதனமா! ஊம்! அசந்து மறந்து துரங்கினீயோ, தண்டு மரக்கட்டைக்குள்ளாற நீ அகப்பட்டுக்கிட்டு, அப்பாலே காளையோட கால் குளம்புக்குள்ளவும் நீ மிதிபட்டுப் போவே! ஆமா! அந்திமழை அழுதாலும் விடாதுங்கிறது கணக்கிலே, அப்புறம் நீ என்னதான் காவடி எடுத்தாலும், நோக்காட்டிலேருந்து நீ தப்பவே ஏலாதாக்கும்!” என்று வளமையான புத்திமதிப் படலத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு, அவரும் செக்கு மாடாகவே இயங்கி, செக்கு இழைத்த ராகத்தாளக்கட்டுடன் கூடிய லயசுத்தமான சங்கீதக் குழைவின் இழைகளுடன் ஒன்றி, இத்தகைய கால நிர்ணய நியதிக் கோலத்துக்குக் கொத்தடிமையாகிக் கிடக்கும் அவரைச் சுய உணர்வு பெறச் செய்யவல்ல புண்ணியம் இருள் தாய்க்கே கிடைத்து வந்தது. முசுமுசு என்று நாலாவது காணம் பிண்ணாக்கைச் சிறிய கடப்பாரை கொண்டு விலாக்குத்துக் குத்தி கிமிண்டி எடுத்து, அப்புறம் பந்தம் பிடித்து, மிச்சம் மீதி இருக்கும் எண்ணெயைக் கொட்டாங்கச்சியினல் வழித்து வழித்து எடுத்துக் கலயத்தின் ஊற்றி, கைப்பிடித் துணியைச் செக்கின் அடிக்குழியில் தோய்த்துப் பிழிந்து இரும் புப்படியில் இட்டு கிரப்பி, அதையும் கலயத்தில் சேர்த்து, கடைசியில் ‘ஈசுவரா!’ என்ற நாம உச்சரிப்புத்தொனியின் துணைவலியுடன் பெரிய குத்துக் கடப்பாரையை உலக்கையின் அடிவயிற்றில் முட்டுக்கொடுத்து உலக்கையை நீக்கி வீசிவிட்டு, பிண்ணாக்கைத் தோண்டிக் கூடையில் வீசி விட்டு, கடைசியில் உலக்கையைப் படுக்கை வசமாகக் கிழக்கு மேற்கில் வைத்து, அதன்மேல் தென்னங்கீற்றுச் சாம்பான் குடிசையை மூடி முடித்து விட்டுப் புறப்பட்டு1