பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பதிப்புரை

பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் சிறந்த சிறு கதை எழுத்தாளர் ஆவர். இன்றுவரை ஏறக்குறைய அறுநூற்றுக்கு மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுதியைப் பொன்னி ஆசிரியர் திரு. முருகு சுப்பிரமணியன் அவர்கள் 1951-ல் ‘கடல் முத்து’ என்ற தலைப்பில் வெளியிட்டார். 1961-ல் ஆனந்த விகடன் இவருடைய ‘மகுடி’ என்ற ஓரங்க நாடகத்திற்குப் பரிசு கொடுத்துப் பாராட்டியது.

பல திறனாய்வுக் கட்டுரைகளும், பேட்டிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தமிழகம் அவருடைய எழுத்துத் திறனைச் சுவைத்துப் போற்றுமாக!

இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள், "ஆனந்த விகடன்" “தமிழ்" “கங்கை” “கலைமகள்” “உமா” “அமுதசுரபி” “சுதேசமித்திர்ன்” (கிழமை இதழ்) “நண்பன்” “கல்கி” “வினோதன்” “பொன்னி” “தினமணிக் கதிர்” ஆகிய இதழ்களில் பல்வேறு காலங்களில் வெளியானவை. இக் கதைகளே வெளியிட்ட இதழாசிரியர்களுக்கு நன்றி.

பூம்புகார் பதிப்பகத்தார்.