பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

பாவந்தான் இன்னும் சுத்துதேடா! நீ வேறே ஏதுக்குடா அதைப்போட்டு மொத்துற?”

நினைவுகளின் புலம்பலில் இறந்த காலம் எள்ளி நகையாடிக் குலுங்கிற்று. ஆடம்பரமான அமுத்தல் சிரிப்பு. விதி சிரித்திருக்குமோ?

“செந்தில்!”

அழைத்திட்ட வாய் மணத்தது; நினைத்த நெஞ்சு இனித்தது. செந்தில்குமரன் நிழலாடமாட்டானா?

செந்தில் இருக்கிறானே செந்தில், அவன் தான் அண்ணாமலையின் தம்பி மகன். தம்பிக்காரர் தங்கப்பன் கொடுத்து வைத்த பேர்வழி. ஆண்களில் மூன்றும் பெண்களில் நாலும் மொத்தம் ஏழு பிள்ளை குட்டிகள்.

முப்பதாயிர ரூபாய் கைரொக்கமாக வைத்திருந்தவர் அண்ணாமலை. ஆனாலும் அவருக்குத் துளிகூட மகிழ்ச்சியே இல்லை. ‘எல்லாம் இருந்து என்ன? வள்ளி வயித்திலே ஒரு பூச்சி புழு உண்டாகலையே!’ என்று ஏங்கிக் காலத்தை ஓட்டியதுதான் கண்ட பலன். மற்றப்படி, பலன் எதையும் காணவில்லை அவர்.

ஒரு நாள் திடுதிப்பென்று அவருக்கு ‘நெஞ்சடைப்பு’ வந்தது. நல்ல வேளை, பிழைத்தார்! “ஓங்களுக்கோ வயசு தள்ளலை. சொத்து சுகத்தைக் கட்டி ஆள்றத்துக்கும் நாளைப் பின்னைக்கு ஒங்களுக்குக் கொள்ளி வச்சு வாய்க்கரிசி போடவும் ஒரு வாரிசு வேணாமா? யோசிச்சு, சொந்தத்திலேயே ஒரு சுவீகாரம் எடுத்துக்கிடுறதுதான் சிலாக்கியமுங்க. வூட்டிலவும் கலந்துகிடுங்க!” என்றார் கி. மு. சன்னம் சன்னமான பேச்சு, எடுப்பான பல்லவியாகக் களைகட்டிவிட்டது.

சுவீகாரத்துக்கு உரிய, உகந்த புள்ளிக்காகச் சல்லடை போட்டார்கள் தம்பதி இருவரும். எடுத்த