பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

முகம் கண்டு, அவள் அகம் குளிர்ந்தது போலும். மறு பிறவி எடுத்தாள். அவள் கண்மலர்களைத் திறப்பதற்குள், செந்தில், “பெரியத்தா பெரிய ஆத்தா!” என்று புரண்டு குதித்து ஓலமிட்டுக் கதறிய நிகழ்ச்சியை யார் தாம் மறப்பார்கள்?

செந்திலின்பேரில் அண்ணாமலைக்குக் கொள்ளைப் பாசந்தான். ஆனாலும் செந்திலைப்பற்றி அவருக்கு உள்ளூற ஒரு குறை உறுத்திக்கொண்டே இருந்தது. இதை மனைவியிடம் வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை.

‘செந்தில் என்னோட பெண்சாதிகிட்டப் பாசமாயிருக்கிறதாட்டம் எங்கிட்டவும் பிரியம் காட்டுவானா? என்னவோ எனக்கு நம்புறத்துக்கு வாய்க்கலே! ஒரு கடுத்தம் நானும் என் தம்பியும் ― அதான் செந்திலோட தகப்பனும் ― வாய்ப்பேச்சு முத்திக் காட்டமாப் பேசிக்கிட்டிருந்தோம். அப்போ நான் என் தம்பியைக் கோபமாத் திட்டினதைக் கண்டு, இந்தப் பொடிசு வந்து லபக்கின்னு ஒரு சுக்கான் கல்லை லாவி எடுத்து என்னோட நெத்திப் பொட்டிலே வீசிப்புட்டு ஓடியிட்டானே! அதை நான் எப்பிடி மறப்பேனாம் செந்திலாண்டவனே, என் தம்பி மகன் செந்தில் மனசு எங்கிட்டவும் ஒட்டிப்பழகிறதுக்கு அநுக்கிரகம் செய்யமாட்டீயா அப்பனே?’ என்று நெஞ்சின் குகைக்குள் இந்த எண்ணங்களைச் சிறை வைத்து, அந்த மனக் குமுறலில் மனம் குமைந்து சீரழிந்து கொண்டிருந்த உண்மையின் நடப்பை அவரால் எங்ஙனம் துணைவியினிடம் சொல்லித் திரியக் கூடும்?

“என் புண்ணியம் இம்மட்டுத்தான்போலே!” என்று நொந்த நிலையில், மனையாட்டியின் இஷ்டப்படியே, செந்திலைச் சுவீகாரம் எடுப்பதற்கான பேச்சு வார்த்தைகளை கடத்தி, சுவீகாரச் சடங்கு நடைபெறுவதற்கான சுப தினத்தையும் நிர்ணயம் செய்த அண்ணாமலைக்கு இருக்
ஆ 4