பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

நான்தான் ஒரு தரம் அவங்க நெத்தியிலே கல்லாலே அடிக்சுப்புட்டேன். பெரியப்பா! பெரியப்பா!” என்று பெருங் குரலெடுத்து அழுத அவன் அண்ணாமலையின் நெற்றிப் பொட்டு வடுவை விரலால் தொட்டுத் தொட்டு மீண்டும் அழுகையைத் தொடர்ந்து, அந்தத் தூணில் தலையைத் திரும்பவும் பலமாக மோதிக்கொண்டான். வள்ளியம்மையின் கரங்கள் துடித்த துடிப்பை அவன் எங்கே அறிந்திருப்பான்? “தம்பி!” என்று விம்மினாள் அவள்.

“பெரியப்பா!”

பெரியப்பாவின் காலடியில் விழுந்து கத்தின செந்தில் மறுமுறையும் தூணை நாடி ஓடிய நேரத்தில் அவனைத் தேடி ஓடிவந்த கைகளைக் கண்டு தலைநிமிர்ந்தான்.

பெரியப்பா, “கண்ணே, இப்பத்தாண்டா என் மனசு குளிர்ந்தது. ஐயையோ! இவ்வளவு ரத்தமா? என்று எழுந்து செருமினார்; செந்திலை அணைத்துக்கொண்டு தேம்பினார். வள்ளியம்மையின் இதழ்க் கரையில் முறுவல் இருந்தது. செந்திலை மார்புறத் தழுவினார். குருதியைத் துடைத்தார். வீக்கம் கண்ட இடத்தைத் தடவினார்.

“அப்படீன்னா நீங்க சாகலேயா, பெரியப்பா?” என்று வினவினான் சிறுவன். கண்ணீரைச் சட்டைத் தலைப்பினால் துடைத்துக்கொண்டான். அழகுக் கண்களில் ஆர்வம் இருந்தது.

பெரியப்பா சிரித்தபடி, “ஊஹூம், இல்லை! உன்னைச் சோதிக்கிறத்துக்காக நானும் உங்க பெரியாத்தாவும் நடிச்சோம்!” என்று அமைதி கனிய மொழிந்தார்.

செந்திலின் சந்திர முகம் ஏன் இப்படிக் கறுத்துச் சிறுக்கிறது?

“என்னை ஏமாத்தறத்துக்காகவா நீங்க பொய்சொன்னீங்க பெரியப்பா? இனிமே நான் உங்ககிட்டே இருக்க