பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மாட்டேன். ஆமா!” என்று சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு ஓடலானான்.

அண்ணாமலைக்குத் தலை சுற்றியது. எழுத்தார். நடக்கவும் தெம்பில்லை. மூச்சு இறைத்தது.

வள்ளியம்மைக்குச் சப்த நாடிகளும் ஒடுங்கின. “தம்பி! கண்ணே!” என்று அழைத்தவளாக, சிறுவனைப் பின்தொடர்ந்தாள்.

செந்தில் திரும்பினால்தானே?

வைகறை நிலவு மங்கியது. சுற்று மதிலின் கீழ்க்கரையில் கிணறு ஒன்று இருந்தது. அதை அண்டினாள். “தம்பி, இப்ப நீ திரும்பப் போறியா? இல்லே, நான் இந்தக் கேணிக்குள்ளாற் குதிச்சுச் சாகட்டுமா?” என்று கேட்டாள்.

அவ்வளவுதான்!

செந்தில், “பெரியாத்தா! நான் இந்தா வந்திடுறேன். நீங்க சாகாதீங்க, நீங்க செத்தா நானும் செத்துப்பிடுவேன்!” என்று சத்தமிட்டுத் திரும்பினான்.

குழந்தைத் தெய்வமா அவன்?

“செந்தில், நீ எங்களே ஆளவந்த சாமியப்பா! கண்ணே! ராஜா!”

இரட்டைக் குரல்கள் மாறி மாறி ― மாற்றி மாற்றி ― ஆனந்தக் கண்ணீர் சொரிந்த்ன.

விடிந்தது!