பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தீர்கள், ஐயா! பாம்பின் சட்டைக்கும் இவருடைய உடற் கூண்டுக்கும் நூலிழைகூட வித்தியாசம் கிடையாது!

ஆலமரத்துப் பைங்கிளி நான். ஆனால் உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியுமா? உங்களைப்போல எனக்குப் பொய் பேசிப் பழக்கம் கிடையாது!...உண்மை இதுதான். ‘ஆலமரத்துப் பைங்கிளி’ என்னும் பட்டப் பெயர் பொன்னிக்கு உரித்தானது. பொன்னன் அப்படித்தான் அவளைக் கூப்பிடுவான். இப்படிக் கூவி அழைப்பதைக் கேட்டு நான் கூட பலமுறை ஏமாந்திருக்கிறேன். என் மூக்குச் சிவப்பு, ரத்தச் சிவப்பாகிக் கன்றி விடும். எனக்கே புரியாத எங்கள் ‘ரங்கா’ மொழியில் நான் பேசிக்கொள்வேன். ஆனால் அந்தக் காதலர்கள் வாய் ஓயாமல் பேசித் தீர்த்த பேச்சுக்கள் ― அவை தூவிய சம்பவங்கள் எல்லாம் ஒன்று பாக்கியில்லாமல் என் மனசுக்கு அத்துபடி.

“ஓ, மச்சான்!” என்பாள் ― அன்பு காட்ட உரிமை பூண்டவள்.

“ஆ, பொன்னி!” என்பான் ― நேசம் நிறைந்த மனம் கொண்டவன்.

அவள் சிரிப்பு மாதிரி நானும் சிரிக்கவேண்டுமாம்!― என்னவள் சொல்லுகிறாள். ஆனால், இந்தப் பொன்னி எவ்வளவு அந்தமாகச் சந்தம் கூட்டி இளநகை புரிகிறாள் என்கிறீர்கள்!...பார்த்துக்கொண்டே யிருக்கலாம்; கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும்,

இதே ஆலமரத்து நிழலில்தான் அவர்களுடைய காதல் பிறந்தது; வளர்ந்தது.

ஆலமரப் பைங்கிளியே, அழகுள்ள தாழம்பூவே!
காலமெல்லாம் நீ சிரிப்பாய்; காத்திருப்பேன் உனக்காக!