பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


“மச்சான்!”

“என்ன...பொன்னி!”

“வந்து...வந்து!”

அவள் நாணிக் கோணிவிடுவாள். அவன் அவள் பூங்கரம் பற்றி நிற்பான். அவளது போதையை, அவனது போதை அறியாமல் இருக்க முடியுமா?

சாதாரணமாகக் கதைகளிலே இம்மாதிரி உள்ளம் ஒருமித்த காதலர்களுக்கு ஒரு எதிரி மச்சானோ, அல்லது அவர்களது கலியானத்தை விரும்பாத அப்பனோ, அல்லது, பொருந்தாத ஜாதகக் குறிப்போ எழுதப்பட்டிருக்கும். ஆனால், இவர்களுக்குக் குறுக்கே யாரும் இல்லை. ஆண்டவன். கூட அனுசரணைப் புரிந்தான்.

ஆனால்...!

இந்த ஆனாலில்தான் பாக்கிக் கதையே அடங்கிக் கிடக்கிறது. அதை இப்போது நினைத்தாலும் எனக்கு அழுகை அழுகையாக வருகின்றது!

ஆலயம் சிந்திக்கின்றது:

புனிதம் மண்டிய என் உள்ளத்துக்குத் தெரியாமல் உலகத்தில் எந்த ஒரு சிறுசம்பவமும் நடக்க முடியாது. அந்தச் செல்லத்தேவன் ஊருணியின் கண்கலக்கம் எனக்குப் புலனாகாமலா போய்விடும்!

ஆம், பொன்னி-பொன்னன் காதலர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் கரத்திருப்பார்கள்...? தட்டு திட்டங்கள் இல்லை; பருவமும் வயசும், நிலவும் . தென்றலும் அவர்களைச் சோதித்தன. ஆனால், அவர்கள் இருவரும் உயிர்விட்டு உயிர் மாற்றிக்கொண்டு அமைதியான ஆரவாரத்துடன் நிலவி வந்தார்கள் என சன்னதியையும் அவர்கள் மறந்துவிடவில்லை,