பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


அதோ, பொன்னன் சிலையென மலைத்து நிற்கிறான். அவனுடைய உடம்போடு உரசியவண்ணம் அவள் நிற்கிறாள். காற்றைச் சாடி வந்த களைப்பு, பூலோகத்தைக் கடந்து வந்த அயர்வு அவ்விரு ஆவிகளின் முகத் திரையில் நிழலாடுகின்றன.

பொன்னன் இளமுறுவலை உதட்டுக் கரையில் உலவ விட்டவாறு நின்றான். அவனுக்கு எப்படி இத்துணை ஆனந்தமும் அமைதியும் ஏற்பட்டன?......

“அத்தான்!”

“பூவிழி!”

“அத்தான், உங்களைக் காணாமல் நான் எவ்வளவு சஞ்சலப்பட்டுப் போனேன், தெரியுமா?... நான் உங்களைக் காதலித்தேன். ஆனால், விதி நம் இரண்டு பேரையும் ஒன்றுகூட வைக்கவில்லை. ஆகவே, நான் மரித்தேன். உங்களைத் தேடித் தேடி அலைந்தேன். கடைசியில் ஒரு நாள் உங்களைச் சந்தித்தேன்...!”

“பூவிழி, களிப்பு வேளையில் கண்ணீருக்கு அலுவல் வைக்காதே. நாம் இப்போது எங்கு இருக்கிறோம்?...”

“சொர்க்கத்தில்!”

“பூலோக சொர்க்கத்திலா?”

“இல்லை, இரண்டாவது சொர்க்கத்தில்!...”

“அப்படியென்றால்!...”

“நான் நிர்மானித்திருக்கின்ற இந்த இரண்டாவது சொர்க்கத்துக்கு நான் தான் ராணி, நீங்கள்தான் ராஜா!...”

“ஓஹோ!”

“ஆமாம்...!”