பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


“ஆகட்டும், அத்தான். நம் காதலைத் தோற்கடித்த விதியின் வஞ்சகச் செயலினால் நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தோம். நம் இருவர் உடல்களும் எந்தச் சுடுகாட்டிற்குக் காணிக்கையானதோ?” இல்லை, ஓடிச்சென்றக் காட்டாற்றின் இதயத்தில்தான் ஜீரணம் ஆனதோ, தெரியாது.”

“குப்பையைக் கிளறாதே!”

“வினாடிப் பேச்சுக்கு பொறுமை காட்டவில்லை உங்கள் மனம். ஆனால் நித்தம் நித்தம் நான் இதே குப்பையைக் கிளறிக் கிளறி எத்துதுணை துன்பம் அனுபவித்திருப்பேன் என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தீர்களா? ...”

“பூவிழி”

“கொஞ்சம் உன் பேச்சை நிறுத்து. என்னைத் கொஞ்சம் பார், அத்தை மகளே!”

“ஓகோ! புதுஉள்ளம் கொண்டது எனக்கு அதிசயமான செய்தி, நீங்கள் புது எழில்கொண்டு விளங்குவது உங்களுக்கு வினேதமான தகவல். சரி, புது உலகம் அழைக்கிறது, போவோம் வாருங்கள் அத்தான்!”

பொன்னன் அவளுடன் தொடர்ந்தான். புதுமையின் மணம் பரவியிருந்த பகுதிகளிலெல்லாம் இருவரும் ஜோடியென மிதந்தார்கள்; எழில் மண்டித் திகழ்ந்த பாதைகள் அத்தனையிலும் அவர்களது தொடராத நிழல் பதிந்து புதைந்தது.

“அத்தான்!” அவள் அவளை நோக்கினான். இளமை கொழித்த கன்னியின் பருவம் போதை கொண்டு திகழ்ந்தது. “அத்தான்!"