பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

“நீ என் சொத்து!”

“உங்கள் கண்ணோட்டத்தில் புதிய சொத்துரிமைச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறதா? நீங்கள் வேற்று மனிதர்!... நான் வேறொருத்தரின் நிதி!”

“பைத்தியக்காரப் பெண் நீ!”

“இதே மொழிக்கு ‘ஆண்பால்’ தந்து நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள், ஐயா!”

“ஐயாவா?”

“நான் உன் ஐயனல்லவா?”

“என் ஐயனை எங்கோ மறைத்துவிட்டீர்!”

“குற்றம் செய்தவன் நான் அல்ல; வேறு யாரோ ஒருத்தி!”

“பார்க்கிறேன் அவளை!”

“அவளை நீ பார்க்க முடியாது!”

“ஏன் முடியாது? என் தாலி எனக்கு அவளைக் காட்டும்!”

“அப்படியா?. உன் நினைவு மாறவில்லையா? பூவுலக ஞாபகம் இன்னும் உன்னைப் பிரிந்து ஓடவில்லையா?”

“ஊஹும்!”

“அதிசயமாக இருக்கிறதே!”

“இந்த மாங்கல்யத்தின் சிறப்பும் அதுவேதான்!”

“முந்தைப் பிறவியில் நாம் இருவரும் முறைமை கொண்டு முறையாகக் காதலித்தோம்; நாம் இருவரும் கலியாணம் செய்து கொள்ள இருந்தோம். ஆனால், காலன் வழிப்பட்டு விட்டோம்.”