பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

பால் சுரந்த சக்தி

முதல் பிரம்மா பெருமூச்செறிந்தார்.

முதற் பூ மடலவிழ்ந்தது.

முதல் குரல் புறப்பட்டது.

குழந்தை அழுதது; அழுதது; அப்படி அழுதது.

அபாயங்களைத் தன்னுள் அடக்கிக் கிடந்த காடு. கூப்பிடு தொலைவில் ஒரு காட்டாறு. கருக்கல் பொழுது.

புல் தரை; பிறந்த மேனியாய்க் கிடந்தது பச்சை மண். பச்சை ரத்தம் மேனியை வெட்டிப் பாய்ந்தோடத் துடித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் உடல் துடிதுடித்தது. நஞ்சுக் கொடி துவண்டு கிடந்தது. ரத்தத் துளிகள் பல கோடுகளில், பல கோணங்களில் சிந்திக் கிடந்தன. பன்னீர்த் துளிகள் அந்தக் குருதிப் புனவில் இரண்டறக் கலந்தன.

புள்ளி மான்கள் ஓடிவந்தன. வண்ணப் பறவைகள் நாடி வந்தன. வாயில்லாப் பிராணிகள் வாய்விட்டுப் புலம்பின.

அந்தக் குழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. குழந்தைத் தெய்வம் அழுதது; அழுது கொண்டேயிருந்தது.