பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

“”திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளுக்குச் சிரிக்கத் ' தானா தெரியாது.......?

உதயம். தெய்வச் சந்நிதியில் தெய்வகானம்;

சாதிகுலம் பிறப் பிறப்புப் பந்த முத்தி.
      அரு உருவத் தன்மை, நாமம்
ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும்
      பிரிவற நின்றியக்கஞ் செய்யும்
சோதியை மரத்தூரவெளியே மன தவிழ
      நிறைவான துரிய வாழ்வேத்
தீதில் பரமாம் பொருளைத் திருவருளே

      நினைவாகச் சிந்தை செய்வோம்!

தெய்வக் குழந்தையின் அழுகையொலி வர வரத் தேய்ந்து கொண்டிருந்தது.

இதய முள்ள யாரோ ஒரு செம்படவன் வந்தான்; குழந்தையைப் பார்த்தான்; அவனுடைய கண்ணீர்த் துளிகள் பேசும் பொற் சித்திரத்தைக் குளிப்பாட்டின. “குழந்தை! மேலுலகத்துப் பாரிஜாதப் பூ! ஆண்டவனே உன் மகிமையே மகிமை. எங்கள் பிள்ளைக் கலி தீர்ந்து விட்டது!” என்று ஆனந்தக் குரலைத் திக்கெட்டும் திசை பிரித்து வீட்ட வண்ணம், சேயும் கையுமாகப் பறந்தான்.

முக்கண்ணி சிரித்தாள்!

முக்கண்ணன் சிரித்தான்!

பாரிஜாதம் சிரித்தது!

இருட்டு—மை இருட்டு.