பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

புடம்

'தாயோ.... அம்பிகை!.....'

சொல் ஒவ்வொன்றிலும் இதயத்தை இருத்திக் கூப்பிட்டாள். இருத்திய இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் தெய்வ நம்பிக்கை கமழ்ந்தது. கமழ்ந்த நம்பிக்கையின் உயிர்ப்பாக, மெல்லிய சிரிப்பின் இதழ் படர்ந்தது. ஒற்றை நூலிழை, பாளம் வெடித்த உதட்டோரங்களிலே விளையாட, அவ்விளையாட்டிலே தன் உயிரை விளையாடச் செய்தாள். அவள் - அகிலாண்டம். அகிலாண்டேஸ்வரி யல்லள்!-'அவள்' தெய்வமன்றே ?

நைலான் பட்டில் பிசிறு பாய்ந்த வெள்ளைக் கம்பிகள் சிதறுண்டு காற்றில் அல்லாடுவதைப்போன்று, தும்பைப்பூ முடிக்கற்றைகள் - காற்றில் பறப்பதைப்பற்றி கவலை கொள்ளாமல், விறைப்பாக ஊன்றிக்கொண்ட இடது கையில் மேனியின் அழுத்தம் பூராவையும் அழுத்தியவளாக-- அழுத்திக் கொண்டவளாக உட்கார்ந்திருந்தாள். முடிவை நெருங்குகின்ற தொடக்கமாக, பின் பனி வாடை வீசியதால், ஜமக்காளத்தைவிட்டு நீட்டப்பட்டிருந்த கால் பாதங்களில் குளிர்ச்சி அவ்வளவாகத் தேங்கவில்லை! என்றாலும், அந்த அளவுக்குக்கூட, சீதளத்தின் சக்தியைத் தாங்கமுடியவில்லை அவளால், பாதங்கள் ஜில்லிட்டிருக் தன , உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்த மண்டையின் பளு,