பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

ஸ்ரீமான் ராமலிங்கம் அடித்துப் போட்ட கோலத்தில் காட்சியளித்தார். மேல் தோல் வெடித்துச் சிதறிக் கோடுகள் கிறுக்கியிருந்த இதழ்க் கங்கினின்றும் வார்த்தைகள் கிளம்பின. இருந்த இடத்திலிருந்து நகர்ந்து, இன்னும் நெருக்கம் - அமைத்துக் குந்தினாள் அவள், மெலிந்து வெளுத்துக் கிடந்த கைகளை ஆதரவுடன் அன்பு சேர்த்துக் தடவிக்கொடுத்தாள். துளி கக்கிய சுடுநீர் மணிகளையும் நாசுக்காகத் தடவி விட்டாள். சுட்ட இடம் குறிப்புச் சொல்லியிருக்க வேண்டும். அவர் உடம்மை அப்படியும் இப்படியும் அசைத்துக் கொண்டார். ஆற்றாமையில் நெடுமூச்சு விளைந்தது. அரும்பாடுபட்டு விழிகளை அசைக்க முயன்றார் அவர்.. அரைப்பார்வை நிலை தான். அதுவும் சிறுபொழுது தான் மூடிய நயன வட்டங்களில் கண்ணீர் வளைந்தது.

அவளுக்கு நெஞ்சு ஏறி இறங்கியது. மார்பில் படர்ந்திருந்த எலும்பு வரிசையில் ஓர் அழுத்தம் தெரிந்தது. குனிந்தவண்ணம், வலது கை துனி விரலை வைத்துத் தடவினாள். மின்னலுணர்வொன்று தேகமெங்கணும் ஊடுருவியது. மயிர்க்கூச்சம் கிளர்ந்தது. "தெய்வமே' என்று மெய்மறந்த நினைவில் பேசிய அவள், அந்த அருமைப் பொருளை' எடுத்துக் கண்களிடைப் பதித்தாள். கொட்டு மேளம் முழங்க, தன் கழுத்தில் மங்கலநாண் ஏறிய அந்தப் பொற்புடைத் தவநாளை அவள் எங்ஙனம் மறப்பாள்?

சுவர்க் கடிகாரம் இருமுறை ஓசை பரப்பிற்று.

அகிலாண்டம் எழுந்து 'அவுன்ஸ் கிளாசை' எடுத்துக் கழுவினாள்... மருந்துக் கலவையை அளவு பார்த்து ஊற்றி எடுத்துச் சென்று, கணவரின் உதடுகளை நீக்கி ஊற்றினாள், செம்பாதி உள்ளுக்குள் சென்றது, வழிந்ததைத்